கிராமத்தினரும், தாங்கள் உதவியற்றவர்களாக உணர்ந்து கொள்கிறார்கள்

Tamil Saturday, May 07, 2016 - 22:22

மணிமேகலைக்கு வயது 40. திருநங்கையான இவர், கணியம்பாடி கிராம பஞ்சாயத்தின் 8  வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இந்த வார்டு பகுதியில் வசிக்கும் சுமார் 600 க்கும் மேற்பட்ட மக்களுடைய பிரச்சினைகளை பஞ்சாயத்தில் எடுத்து சொல்ல வேண்டியவர்.

2011 உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் போட்டியிட்ட இவர், அதிமுக ஆதரவு வேட்பாளரை 70 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். “நான் மக்களுக்கு ஏதாவது உதவி செய்வேன் என கருதி தான் மக்கள் எனக்கு வாக்களித்தனர்.” என கூறுகிறார் மணிமேகலை. உள்ளூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரோ, தொகுதி எம்.எல்.ஏ, வோ இவரை சந்திக்க மறுப்பதால், இவரால் இந்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை. தனது வார்டுக்கு தேவையானவற்றை பட்டியலிட்டு அனுப்பியும், இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என இவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திட்டம் ( வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் திருமணத்திற்கு ரூ.20000 வழங்கும் திட்டம்) சிவகாமி அம்மையார் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ( வறுமைக்கோட்டு கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 நிரந்தர வைப்புநிதியாக போடும் திட்டம்) தமிழ்நாடு ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் எல்லாம் பயனாளிகளை சென்று சேரவில்லை என மணிமேகலை கூறுகிறார்.

இதன்காரணமாகவே, தனது சொந்த பணத்தை ஏழை மக்களுக்காக செலவிட்டதாக கூறும் மணிமேகலை, “ யாரேனும் ஒருவர் இறந்தாலோ அல்லது பெண் குழந்தைகளின் திருமணத்திற்கோ எனது கையிலிருந்து 2000 ரூபாய் வழங்குகிறேன். இந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் 1000 ரூபாய் கொடுக்கிறேன் “ என்று அவர் கூறினார்.

கிராமத்தினரும், தாங்கள் உதவியற்றவர்களாக  உணர்ந்து கொள்கிறார்கள். 60 வயதான அலஞ்சி கூறுகையில் “ இந்த கிராமத்திற்கு இலவச கிரைண்டர்கள் 100 கொடுக்கப்பட்டால் 20 மட்டுமே பயனாளிகளுக்கு வந்து சேருகிறது” என்றார்.

மேலும்,நியாயவிலைக்கடைகள் எதுவும் இல்லாததால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே பொருட்களை வாங்க செல்ல வேண்டியிருப்பதாக இக்கிராமத்தினர் கூறுகின்றனர்.

5 ஆம் வகுப்புவரை இயங்கி வரும் பள்ளிக்கூடத்தை சுட்டிக்காட்டி பேசிய மணிமேகலை, இங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் வாங்கி தருவதாக கூறினார்.

அரசு கட்டி தந்த வீடுகளை புதுப்பிக்காததால், பழுதடைந்து விழுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து 35 வயதான சசிக்குமார் கூறுகையில், “ கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிய வீடுகள் எல்லாம், யாருமே பழுது நீக்க முன்வராததால் சுவர்கள் எல்லாம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.” என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தான் வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்த போது, சொந்தமாக கடை வைக்க மணிமேகலை உதவியதாக கூறினார்.

“அதிமுக ஆதரவாளர்கள் ஒருசிலரே, அனைத்து பயன்களையும் பெறுகிறார்கள்” என்கிறார் மணிமேகலை.

அடுத்த உள்ளாட்சி தேர்தலில், அதிமுக ஆதரவுடன் வெற்றிபெற்ற கவுன்சிலருக்கு வாக்களிக்க போவதில்லை என அந்த கிராமத்தினர் கோபத்துடன் கூறினர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.