ஜனாதிபதி கையெழுத்திடாமல், சட்ட நிபுணர்களின் ஆலோசனையை நாடியிருப்பதால், மாணவர்களுக்கு நுழைவு தேர்வு குறித்த குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது

 PTI
Tamil NEET Monday, May 23, 2016 - 14:26

மருத்துவ நுழைவு தேர்வை இந்த ஆண்டிற்கு ரத்து செய்யும் வகையிலான அவசர சட்டத்தை உருவாக்கி, அதனை ஜனாதிபதியின் ஒப்புதலை பெற  மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், ஜனாதிபதி அவசரசட்டத்தில் ஒப்பிடாமல், சட்ட நிபுணர்களின் ஆலோசனையை நாடியதால், நுழைவு தேர்வு தொடர்பான குழப்ப நிலை நீடித்து வருகிறது.

 

இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மத்திய சுகாதார அமைச்சர், அவசர சட்டம் கொண்டு வரும் எண்ணமில்லை என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் நாடு முழுவதும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் குழப்பநிலையை அதிகரிக்க செய்தள்ளது.

 

சமீபத்தில், நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, இந்த பொது நுழைவு தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க வசதியாக அவசர சட்டம் கொண்டு வரும்படி பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை நிர்பந்தித்தன. அத்துடன், கடைசி நிமிடத்தில், புதிய முறையை மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கு நூற்றுகணக்கான மருத்துவக்கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்தே, மத்திய அரசு, இந்த ஆண்டிற்கு மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு நுழைவு தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையிலான அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது.

 

இந்த அவசர சட்டம் குறித்து, மாணவர்களும், பெற்றோர்களும், நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்துபவர்களும் மாறுபட்ட பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். அனைத்து அரசு கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் என அனைத்தையுமே இந்த நுழைவு தேர்வு வரம்பினுள் கொண்டு வர வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு, தற்காலிக தடை போடும் வகையிலேயே இந்த அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், மாநில அரசின் கீழ் உள்ள கல்லூரிகள் கலந்தாய்வு மட்டுமே செய்து கொள்ள முடியும். மாறாக நுழைவு தேர்வுகள் நடத்தவியலாது. தனியார் கல்லூரிகளுக்கும் கூட இதுவே பொருந்தும். “ இத்தகைய நிலை, மாநில கல்வி பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவே அமையும்” என்கிறார் எம்பாசிஸ் நுழைவு தேர்வு பயிற்சி மையத்தின் ராஜசேகர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கும் அவர், தேர்வு நெருங்கும் நேரத்தில், மோசமான முறையில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தார். “ இது இந்த ஆண்டிற்கு மட்டும் தான். இதில் உள்ள பிரச்சினைகள் செட்டில் ஆக இன்னும் கொஞ்சம் நாட்கள் கூட தேவைப்படும். இதில், வரவேற்க வேண்டிய அம்சம் என்னவெனில், தனியார் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கு நுழைவு தேர்வு நடத்தி, அதில் உள்ள ஓட்டைகள் வழியாக தப்பித்து கொள்ளும் வாய்ப்பு இனி இருக்கபோவதில்லை. “ என்றார்.

 

இந்த நுழைவு தேர்விலிருந்து, மாநிலங்களில் உள்ள கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க அவசர சட்டம் எப்படி குறிப்பிடுகிறது ? “ இந்த நடவடிக்கை மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என்பது நம்புவதற்கு கடினமாகவே உள்ளது.” என எக்ஸ்செல் பயிற்சி மையத்தின் இயக்குனர் சேம் கூறுகிறார். “ நுழைவு தேர்வுக்கு தயாராக அவர்களுக்கு இரண்டு மாதங்கள்  உள்ளன. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மாநில கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் இடையே நுழைவு தேர்வுக்கான தயாரிப்புகளில் வித்தியாசம் இருக்கும். “ என கூறும் சேம், அவசர சட்டம் மோசமான நேரத்தில் கொண்டு வரப்படுவதாக கூறுகிறார்.

 

“இந்த அவசர சட்டத்திற்கும் மேல், எங்களுக்கு நிலையாக இருக்கும் குழப்பத்தினால், ரொம்பவே விரக்தியில் உள்ளோம் “ என்கிறார் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர் டான்னி. “ன் விண்ணப்ப படிவங்கள் வழங்க தாமதமாகி போனது. தேர்வுகள் தாமதமாகி போகிறது. இது ஒரு தெளிவில்லாது இருக்கிறது.” எனக்கூறும் டான்னி தான், மணிப்பாலில் கடந்த ஏப்ரல் 10 அன்று தனியார் மருத்துவக்கல்லூரி நடத்திய நுழைவு தேர்வில் கலந்து கொண்டதாக கூறுகிறார். அதனை தொடர்ந்து பொது நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதன் முதல்கட்ட நுழைவு தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.” தற்போது, இந்த அவசர சட்டம் இரண்டாம் கட்ட தேர்வை தாமதிக்க வைக்கிறது” என்கிறார் அவர்.

 

இந்த நுழைவு தேர்வால், மாநில கல்வி பாடத்திட்ட மாணவர்கள் இதனால் அதிக பயன்பெறுவார்கள் என்ற எண்ணம் சிபிஎஸ்இ மாணவர்களிடையே இருந்து வருகிறது. “ தற்போது அவர்களுக்கு இருவிதமான நுழைவு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எங்களுக்கு ஒன்றே உள்ளது. எனது கட் ஆப்பை, மாநிலக் கல்லூரிகளில் உள்ள கட் ஆப்புடன் ஒப்பிட்டால், என்னால் கலந்தாய்வு நிலைக்கு கூட போவதை என்னால் கற்பனை செய்ய முடியாது. “ என கூறுகிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு சிபிஎஸ்இ மாணவர்.

 

ஆனால் இது உண்மையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பயனுள்ளதா ? “ 96% - 98% சதவீத மதிப்பெண்கள் எடுத்த ஒரு சிலருக்கே இது பயனுள்ளதாகலாம். அவர்களால் எளிதாக கலந்தாய்வுக்கு சென்று விட முடியும். ஆனால் என்னால் முடியாது. “ என்கிறார் கோகுல் என்ற மாநில பாடத்திட்ட மாணவர். இதற்கு குறைந்த எண்ணிக்கையிலான சீட்டுகளே காரணம் என்கிறார். “ வழக்கமான நமது சீட்டுக்களும் கூட பொது நுழைவு தேர்வின் கீழ் வருகிறது. அதனால் போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பொது நுழைவு தேர்வு மட்டுமே எனது ஒரே தேர்வாக அமைந்துள்ளது. போதிய கட் ஆப் மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்களிடமிருந்து, மாநிலங்களில் இருக்கும் கல்லூரிகள் அதிக பணத்தை கேட்பார்கள்.” என கூறுகிறார் அவர்.

 

அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுவிடும் என பலரும் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். “ இரண்டு நாட்களுக்கு முன்னர் பொது நுழைவு தேர்வு ரத்து என்ற செய்தி கூறப்பட்டது. ஆனால், தற்போது அது ஒரு அவசர சட்டம் தான் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்று எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. “ என்றார் அந்த மாணவர்.

 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், அவசர சட்டம் கொண்டு வரக்கூடாது என பிரதமருக்கு டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதையும் மீறி அவசர சட்டம் கொண்டு வருவது “ அரசு கறுப்பு பணத்திற்கும், வரி கட்டாத பணம் வைத்திருப்பவர்களுக்கும் ஆதரவளிப்பது போன்றாகிவிடும்” என கூறியுள்ளார். ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த மேய் 1 ஆம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வில் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்ட நுழைவு தேர்வு ஜூலை 24 இல் நடக்கிறது.