மேய் 19 அன்று தமிழ் சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 215 சதவீதமாக அதிகரித்துள்ளது

Tamil Friday, May 27, 2016 - 20:17

வாக்கு எண்ணும் நாளில், தொலைகாட்சி நிருபர்கள் செய்திகளை சேகரித்து உடனுக்குடன் அளிப்பதில் மிகவும் பிசியாக இருந்திருப்பர். இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணை அடைவதற்கான முயற்சியே.

கடந்த சில வருடங்களாக, வாக்கு எண்ணும் தினத்தன்று டிவிக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மற்ற தினங்களை காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக சட்டபேரவை வாக்கு எண்ணும் நாளிலும் அவ்வாறே நடந்துள்ளது.

ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு குழு (BARC) நியூஸ் மினிட்டிற்கு அளித்த தரவுகளின் படி இந்த ஆண்டு வாக்கு எண்ணும் தினமான மேய் 19 அன்று தமிழ் சானல்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 215 சதவீதமாக அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணுவதற்கு முந்தின வாரத்தில் 28.3 மில்லியனாக இருந்த ஒட்டுமொத்த தமிழ் சேனல்களின் இம்பிரசன்ஸ்களின் எண்ணிக்கை தேர்தல் தினத்தன்று 89.5மில்லியனாக உயர்ந்துள்ளது.

இவற்றில் தனியார் சேனலான புதிய தலைமுறை 20.3 மில்லியன் இம்பிரசன்ஸ்களுடன் அதிக பார்வையாளர்களை பெற்றதாக உள்ளது. அதனையடுத்து 19.3 மில்லியன் இம்பிரசன்ஸ்களை கொண்டு பாலிமர் செய்திகள் இரண்டாமிடத்தில் உள்ளது. தந்தி டிவி 17.2 மில்லியன் இம்பிரசன்ஸ்களை கொண்டுள்ளது.

பார்வையாளர்களை கவருவதில் அதிமுகவின் செய்தி சேனலான ஜெயா ப்ளஸ், கலாநிதிமாறனின்  சன் நியூஸ் மற்றும் திமுகவின் செய்தி சேனலான கலைஞர் செய்திகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. இவ்விரு சேனல்களும் முறையே 5 மில்லியன் மற்றும் 6 மில்லியன் இம்பிரசன்ஸ்களை பெற்றுள்ளன.

தேர்தல் நாளன்று நியூஸ் 7  சேனல் 4 மில்லியன் இம்பிரசன்ஸ்களையும், சத்தியம் டிவி மற்றும் ராஜ் டிவிக்கள் முறையே 3 மற்றும் 1 மில்லியன் இம்பிரசன்ஸ்களையும் பெற்றுள்ளன.

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.