பொது வாக்குகள் 50 சதவீதமும், நடுவர்கள் வாக்கு 50 சதவீதமும் வெற்றியாளரை தீர்மானிக்கின்றன என்றார் அவர்.

news Tuesday, March 22, 2016 - 20:32

ஆனந்த் அரவிந்தாக்ஷன், வெற்றி பெறுவதையே பார்வையாளர்கள் விரும்பியதாக பாடகர் ஸ்ரீனிவாஸ்  கருத்து கூறியுள்ளார்.

பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. பின்னணி பாடல்கள் பாடிய ஆனந்திற்கு, வாய்ப்பளிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பதிவு ஒன்று பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், “பொது (பார்வையாளர்களின்) வாக்குகள் 50 சதவீதமும், எங்கள் வாக்குகள் 50 சதவீதமும் தான் வெற்றியாளரை தீர்மானிக்கின்றன. ஆனந்தை பொறுத்தவரை, பொது வாக்குகளில் முதலிடத்திலும், நாங்கள் அளித்த வாக்குகளில் இரண்டாவது இடத்திலும் இருந்தார். 2+1 என்பது 3 ஆகவும் பின்னர் அது 1.5 ஆகவும் வந்து முதலிடத்தில் வந்தார்.” என கூறினார்.

பரிதா பொது வாக்கில் 2 வது இடத்தையும், நடுவர்களின் வாக்கில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். எனவே அவர் 2 வது நிலையில் வந்தார். நடுவர்கள் வாக்குகளாக முதலிடத்தை பெற்ற ராஜ கணபதி, பொது வாக்காக 5 ஐ  பெற்றார். இதனால் அவர் 3 வது இடத்தை பிடித்தார்.

“ நான் இசையை தவிர்த்து வேறு எதிலும் கவனம் கொடுக்கவில்லை.” என கூறிய அவர், தொடர்ந்து கூறுகையில்” நான் போட்டியாளர்களுக்கு அரை மதிப்பெண்கள் கூடுதலாக கொடுக்கலாம். ஆனால், அது பாரபட்சத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக, இசையின் மீதுள்ள ரசனை அடிப்படையில் கொடுக்கப்படுவது. எப்படியிருந்தாலும், எனது வேலையை நான் சிறப்பாகவே செய்தேன்.” என்றார்.

பேஸ்புக் பதிவானது, ஆனந்த் பல சினிமாக்களில் பின்னணி பாடல்கள் பாடியவர் என கூறியுள்ளதுடன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பின்னணி பாடகர்களை ஊக்குவித்ததன் மூலம், புதிய திறமைமிக்கவர்களை இனங்காணவில்லை என கூறியிருந்தது.

அத்துடன், இடையில் ஒரு முறை நீக்கப்பட்ட ஆனந்த், பின்னர் வைல்ட் கார்டு மூலம் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டார் என கூறியது.

ஆனால், விஜய் டிவி, ஆனந்த் ஒரு பின்னணி பாடகர் என்பதில் எந்தவித ரகசியமும் இல்லை என கூறியுள்ளது.

தங்கள் விதிமுறைகளில், பின்னணி பாடகர்களோ, சினிமாத்துறையில் இருப்பவர்களோ கலந்து கொள்ள அனுமதியில்லை என எங்கும் குறிப்பிடவில்லை என நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டர் கூறியுள்ளார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.