குழந்தைகளை அவர்கள் எதிர்பாலினத்தவருக்கு எதிரில் உட்காருவதை கட்டுப்படுத்துவதன் மூலம், அவர்களின் ஹார்மோன்கள் சுரப்பதை கட்டுபடுத்திவிட முடியாது என்கின்றனர் வல்லுனர்கள்

Tamil Saturday, May 28, 2016 - 13:33

சென்னையில் உள்ள பலலோக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவர் வினிதா சாய்குமார். அப்பள்ளி இருபாலரும் படிக்கும் பள்ளியாக அறியப்பட்டாலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாலின பாகுபாட்டை கடுமையாக அமல்படுத்தி வந்தது. இந்த கட்டுப்பாடு மிகுந்த சூழலில் கல்வி கற்ற வினிதா, தற்போது 21 வயதை எட்டிய போதும், இளம் ஆண்களுடன் நிற்கும் போது தான் உணரும் மோசமான நிலைகளை நினைவு கூறுகிறார்.

“நான் ஏதேனும் இளம் ஆணிடம் பேசிக் கொண்டிருப்பதை யாரேனும் பார்த்தால், அவர்கள் என்னை ஒழுக்கமற்றவர்கள் என நினைக்க கூடும் என நான் எண்ணியதுண்டு. அதனால் நான் அவ்வாறு நிற்பதை மோசமாக உணரலானேன்”  என கூறுகிறார் அவர்.

இளம் ஆண்களிடம் பேசுவது மட்டுமல்லாமல், ஆண் நண்பர்களை வைத்து கொள்வதும் கூட தவறானது என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது. “ பள்ளிக்கு வெளியே இருந்துள்ள ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு கூட நான் பயந்தேன். ஆனால் இதுகுறித்து எனது பெற்றோரிடம் நான் பேசிய போது,  ஆண்களை நண்பர்களாக வைத்து கொள்ளுவதில் ஒன்றும் தவறில்லை என கூறினர்.” என்றார் அவர்.

பெற்றோரின் இந்த உறுதியான நிலைப்பாடு தான் வினிதாவிற்கு எதிர்பாலினத்தவரிடம் பேசி பழகுவதால் ஏற்படும் குற்ற உணர்வுகளில் இருந்து விடுபட உதவியது.

வினிதாவின் கதை சாதாரணமான ஒன்றல்ல. இந்தியாவில் எண்ணற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் பாலின பாகுபாட்டை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. வினிதாவை போன்றே எண்ணற்ற மாணவர்களும் தனது எதிர்பாலினத்தவரிடம் பேசி பழகும் போது குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பாலின பாகுபாட்டிற்கு காரணம் காலங்காலமாக பெண்களை கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைத்தது தான் என கூறுகிறார் கல்வியாளரான பலதேவன் ரங்கராஜு. கடைசியாக கல்வி வாய்ப்பு அளிக்கப்படும் சூழல் ஏற்று கொள்ளப்பட்ட பின் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி விடுவார்களோ என கவலைப்படுகின்றனர். “ இது, ஒப்பீட்டளவில் சிறிய துன்பத்தை தேர்வு செய்வது போன்றது தான். கல்வியை அவர்கள் பெறும் நிலைக்கு வந்த பின் பாலின பாகுபாடும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.” என்கிறார் அவர்.

தற்போது பெண்களுக்கான கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது இருப்பினும் பல கல்வி நிறுவனங்கள் இந்த பாலின பாகுபாடுகளை பின்பற்ற வேண்டிய தேவை என்ன ?

“கொள்கை கோணத்திலிருந்து பார்த்தால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை  பெண்கள் மட்டுமே அல்லது ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்புகிறார்கள். அவர்களின் இந்த தேவையை சில தனியார் பள்ளிகளும் நன்கு பயன்படுத்தி கொண்டு பூர்த்தி செய்து விடுகின்றனர். அரசு பள்ளிகளில் இப்போது பாலின பாகுபாடுகள் இருந்தாலும், அதுபெரிய அளவிலானதாக இல்லை. சில இடங்களில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதிர்பாலினத்தவரிடம் கூடி பழகுவது குறித்து எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். “ என கூறுகிறார் ஐஜஸ்டிஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் பிரசாந்த் நரங்.

மேலும் அவர், சில விவகாரங்களில் கொள்கை வகுப்பாளர்கள், கல்வியை இரு பாலினத்தவரையும் இணைந்து பெறுவதற்கு வசதியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என கூறினார்.

இருப்பினும், இந்த பாலின பாகுபாடு என்பது வெறும் பாலினத்தோடு மட்டுமல்லாமல் ஜாதி, சமூக பாகுபாடுகளையும் இணைத்தே அமலாக்கபடுவதற்கு காரணமாக இருப்பதாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகிறார்.

“தங்கள் ஜாதியின் புனிதத்தன்மையை காக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதன் காரணமாகவே, அவர்கள் தங்கள் பெண்ணையோ அல்லது பையனையோ அடுத்த ஜாதி, மதம் அல்லது சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கூடி பழகவிரும்புவதில்லை. இது சமூக மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையே.” என கூறுகிறார் அவர்.

கடந்த 2014 இல், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்ற சன்ஜீபன் சர்க்கார், கல்லூரியில் மற்ற துறைகள் எல்லாம் இரு பாலினத்தவரும் படிக்கும் வகையில் இருந்தாலும், ஆங்கிலத்துறையில் ஆண்கள் மட்டுமே படிக்கும் வகையில் இருந்ததாக கூறுகிறார்.

இந்த பார்வை இருபாலருக்கும் எதிராக இருக்கும் படியே பார்த்து கொள்ளப்படுகிறது. “ நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை ஆண்களை கண்டாலே மிகவும் பயப்படுபவளாக இருந்தேன்” என கூறுகிறார் தியா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் சென்னையில் உள்ள வித்யோதயாவில் கல்வி பயின்றவர்.

இத்தகைய சூழலானது, கட்டுப்பாடுமிக்கதாக இருக்கவும், மாணவர்கள் எதிர்பாலினத்தவரை குறித்து உணர்திறன் அற்றவர்களாக இருக்கவும் ஆக்குகிறது என்கிறார் ரங்கராஜூ. “ ஆண்களும் பெண்களும் கலந்து பழக அனுமதிக்கப்படவில்லையெனில், அவர்களுக்குள் உள்ள பிரச்சனைகளை அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் ? அவர்கள் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை எப்படி வளர்த்து கொள்வார்கள் ? “ என கேட்கிறார் அவர்.

இந்திய சூழலுக்கு ஒரு பாலின கல்வி முறை தான் பொருந்தும் என பலரும் கூறி கொண்டிருக்கும் அதே வேளையில் வெளிநாட்டு ஆய்வுகள், பாலின பாகுபாடு சிறந்த கல்வித்தரத்தை உருவாக்க உதவும் என்ற வாதத்தை ஏற்க மறுக்கின்றன. இதுகுறித்து அமெரிக்க மனவியல் அமைப்பு 184 ஆய்வாளர்களை கொண்டு 21 நாடுகளில் உள்ள மாணவர்களை ஆய்வுக்குட்படுத்திய போது, ஒரு பாலின பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், இரு பாலினத்தவர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே உள்ள கல்வித்தரத்தில் மிகச்சிறிய வித்தியாசங்களையே கண்டறிந்தனர்.

பாலின உணர்திறன் அற்றவர்களாக குழந்தைகள் வளர்க்கப்படும் சூழலில்,மற்றொரு பிரச்சினையும் எழுகிறது. “ மூன்றாம் பாலினத்தவர் எப்படி கையாளப்படுகின்றன ? இவர்கள் எங்கே போய் கல்வி கற்பார்கள் ? ஆண்கள் பள்ளிக்கா ? அல்லது பெண்கள் பள்ளிக்கா ? பாலின சமத்துவம் வேண்டுவதோடு, கல்வியை பெறுவதிலும் சம வாய்ப்புகள் கிடைக்க பெற வேண்டும்.” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

கூடுதலாக பல பெற்றோர்களும், தங்கள் டீன்-ஏஜ் குழந்தைகள் காதல் உறவுக்கு ஆடப்பட்டு விடுவார்களோ என பயப்படுகின்றனர். இதனாலேயே குழந்தைகள் தக்க பருவம் வரும் வரை அவர்கள் ஓர் பாலின பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றனர். இருப்பினும், இத்தகைய கட்டுப்பாட்டை விதிப்பதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை எனவும் குழந்தைகளின் உடலியல் வளர்ச்சி சார்ந்த போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் கூறுகிறார் ரங்கராஜூ.

“குழந்தைகளை அவர்கள்  எதிர்பாலினத்தவருக்கு எதிரில் உட்காருவதை கட்டுப்படுத்துவதன் மூலம், நீங்கள் அவர்களின் ஹார்மோன்கள் சுரப்பதை கட்டுபடுத்திவிட முடியாது.ஆனால் உடலுக்குகந்த  வளர்ச்சி மட்டுமே இதனால் கட்டுப்படும்” என்றார் அவர்.

இதனிடையே, எதிர்பாலினத்தவரிடையே ஆரோக்கியமான தொடர்புகளின் குறைவின் காரணமாக, குழந்தைகளுக்கு தாங்கள் தாக்கப்படும் போதோ அல்லது திட்டப்படும் போதோ எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என தெரியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் அசிம் பிரேம்ஜி பல்கலைகழகத்தின் ரிசோர்ஸ் செண்டரில் வேலை பார்க்கும் இந்துமதி.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.