ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றே தேர்தலில் போட்டியிடும் ஒரு ரஜினி ரசிகர்

எங்கள் காலத்தில் தேர்தலில் நிற்பவர்களிடம் தெருவிளக்கை சரி செய்து தரவேண்டும் என மக்கள் கேட்பார்கள். ஆனால் தற்காலத்தில் ஓட்டினை தர எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்கிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றே தேர்தலில் போட்டியிடும் ஒரு ரஜினி ரசிகர்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றே தேர்தலில் போட்டியிடும் ஒரு ரஜினி ரசிகர்
Written by:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கனவு அவரது ரசிகர்கள் நிறைய பேரிடம் இருந்து வருகிறது.ஆனால் ஒரு ரசிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் தேர்தலில் போட்டி போட்டு வருகிறார். அதுவும் ஒன்றிரண்டு தேர்தல்களில் மட்டுமல்ல. கடந்த 27 ஆண்டுகளாக அதாவது  1989 முதல் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் போட்டி போட்டுவிடுவார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மன்மதனுக்கு வயது 62 ஆகிவிட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், 1987 இல் அவரது மரணத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை தனது தலைவராக ஏற்றுகொண்டதாக கூறுகிறார்.

எம்.ஜி.ஆரும், ரஜினிகாந்தும் ஒரே போன்றவர்கள் என மன்மதன் நினைக்கிறார். “ ரஜினிகாந்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக அவராலும் வேலை செய்து கொள்ள முடியும்.” என கூறுகிறார் அவர்.

“ரஜினிகாந்தும், எம்.ஜி.ஆரும் தங்கள் படங்களில் ஒரு போதும் மதங்களை பற்றி பேசினது இல்லை. இந்த ஒரு விஷயமே எனக்கு மிகவும் பிடித்து போனது.”என்றார்.

1989 இல் சிவகாசி தொகுதியில் முதன்முறையாக மன்மதன் போட்டியிட்டார். 1996 க்கு  முன்பு வரை எந்த வேட்பாளரையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்ததில்லை. ஆனால் அந்த வருடம் நடந்த தேர்தலில் ரஜினிகாந்த் “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை எவராலும் காப்பற்ற முடியாது” என அறிக்கை விடுத்தவுடன் மன்மதன் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட துவங்கினார். ஜெயலலிதாவை எதிர்த்து மூன்று முறை  ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், பர்கூர் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

மன்மதன் தனது வாழ்நாளில் ரஜினிகாந்திற்காக சிறை சென்றுள்ளதாகவும் கூறுகிறார். “ ரஜினிகாந்த், ஜெயலலிதாவிற்கு எதிராக பேசினார்.இதனை தொடர்ந்து  நான் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிக்கபோவதாக கூறினேன். இதனால் நான் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டேன்.” என்றார் அவர்.

ஜெயலலிதா மட்டுமல்லாது, மதிமுக தலைவர் வைகோ மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் ஐயங்கார் ஆகியோரையும் எதிர்த்து போட்டி போட்டுள்ளதாக கூறுகிறார் இவர்.

இருப்பினும் கடந்த 27 ஆண்டுகளாக அவர் நம்பிக்கை இழக்காமல் உள்ளார். “ நான் எனது தலைவர் ரஜினிகாந்திற்காக நிற்கிறேன். நான் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஒரு நாள் அவர் அரசியலுக்கு வரக்கூடும்” என்றார்.

மன்மதனை பொறுத்தவரை, ரஜினிகாந்தின் சைகைகளே, அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறுகிறார். .” இதற்கு முன்னர் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு கேள்விக்கு ரஜினிகாந்த் தனது கைகளை உயர்த்தி “ நான் எப்போது அரசியலுக்கு வருவேன் என கடவுளுக்கு தெரியும்” என்று கூறியிருந்தார். தற்போதும் அவர் அதே நிலையில் தான் உள்ளார்.” என்றார்.

தற்போது அவர் ஜெயலலிதாவையோ அல்லது கருணாநிதியையோ எதிர்த்து போட்டியிடவில்லை. ஏன் என காரணம் கேட்டபோது “ ரஜினிகாந்த் அவர்களிடம் நல்ல உறவுடன் தற்போது இருக்கிறார். அதனால் அவர்கள் இருவரையும் எதிர்த்து நான் போட்டியிடவிரும்பவில்லை” என்றார்.

ரஜினிகாந்தை எத்தனை முறை சந்தித்துள்ளீர்கள் என கேட்டபோது 1984, 1996 மற்றும் 2008 என மூன்று முறை பார்த்துள்ளதாக கூறுகிறார்.

தனது அனுபவத்தை மேலும் கூறுகையில்,” 1976 முதல் 1985 வரை நான் ஒரு நடிகராக மாற வேண்டும் என கடுமையாக போராடினேன். அப்போது ஒக்கியாம்பேட்டையில் ஒரு இந்தி திரைப்படத்திற்கு படபடிப்புக்காக வந்த ரஜினிகாந்தை நேரில் சந்தித்தேன்.” என்றார்.

இரண்டாவது முறையாக, 1996 இல் முத்து திரைப்படத்தில் குரல் பதிவுகள் நடந்து கொண்டிருந்த போது அவரை பார்த்ததாகவும், மூன்றாவது முறையாக ரஜினி ரசிகர்கள் பலருடன் சேர்ந்து 2008 இல் பார்த்ததாகவும் மன்மதன் கூறினார்.

தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, “ வெற்றிபெறுவதற்கான வாய்ப்பே இல்லை. எங்கள் காலத்தில் தேர்தலில் நிற்பவர்களிடம் தெருவிளக்கை சரி செய்து தரவேண்டும் என மக்கள் கேட்பார்கள். ஆனால் தற்காலத்தில் ஓட்டினை தர எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்கிறார்கள்.” என்றார்.

இருப்பினும் ரஜினிகாந்தை எதிர்த்து கருத்து கூறிய விஜயகாந்தை இந்த முறை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக கூறுகிறார் அவர்.” விஜயகாந்திற்கு ஒரு பாடம் படித்து கொடுக்க நான் உளுந்தூர்பேட்டையில் அவரை எதிர்த்து போட்டியிட போகிறேன். எனது வேட்புமனுவை மூன்று நாட்களில் தாக்கல் செய்வேன்” என்றார்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com