
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் , சினிமா உலகமும், மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கான கள்ளச்சந்தையும் வேந்தர் மூவிஸின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான மதன் காணாமல்
போனதிலிருந்து மிகவும் பரபரப்புடன் காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் முதன்முதலாக காணாமல் போன தகவல் வெளியானதுடன், திங்களன்று காலையில் அந்த செய்தி எல்லா இடங்களுக்கும் முழுவதுமாக பரவிவிட்டது.
அவரது உணர்ச்சிமிகுந்த ‘தற்கொலை கடிதம்’ என கருதப்படும் ஒரு குறிப்பு பல தகவல்களை சொல்வதுடன், தான் காசிக்கு சென்று சமாதியாக போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில், ஒரு அட்மிஷன் முகவராக மதனின் வாழ்க்கையை பற்றி விளக்கும் அந்த கடிதம் ஊடகங்களின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது, மருத்துவக்கல்லூரியில் அட்மிஷன் வாங்க விரும்பிய ஒரு மாணவரின் தந்தையான வெங்கடேசன் என்பவர் செவ்வாய்கிழமையன்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவகலத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அதில், மதன், தனது மகனுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் அட்மிஷன் வாங்கி தருவதாக வாங்கிய பணத்தில் இன்னும் 52 லட்சம் ரூபாய் தர வேண்டும் என குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த புகார் மனுவில் மேலும், வெங்கடேசன், தனது மகனுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் இடம் எடுத்து தருவதற்காக மதனிடம் 62 லட்சம் ரூபாய் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி பொது நுழைவு தேர்வு, மற்றும் தனது மகனின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலான கட் ஆப்.
மதிப்பெண்கள் 160 க்கும் குறைவாக வந்ததையடுத்து மதனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அந்த பணத்தில் 10 லட்சத்தை தனது சகோதரர் வழியாக திரும்ப கொடுத்த மதன்,
மீத தொகையை கொடுக்காமல், தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரும் ஐஜெகே கட்சி தலைவருமான
பச்சைமுத்துவுக்கும் இடையே மதனுக்குள்ள நெருக்கத்தை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
மதன், வேந்தர் மூவிஸின் தலைவராக இருந்தார். அந்த நிறுவனம் வெளியிடும் திரைப்படங்களின் ஆடியோ கேசட்டுகள் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பச்சைமுத்துவும் கலந்து
கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இருப்பினும் அவரோ, அவரது குடும்பத்தினரோ, வேந்தர் மூவிஸின் இயக்குனர் குழுவில் இருந்தனரா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
ஆனால், வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும், எஸ்ஆர்எம் குழுமத்திற்கும் இடையே நேரடியாக எந்தவித தொடர்பும் இல்லை என எஸ்ஆர்எம வட்டாரத்தினர் கூறுகின்றனர். எஸ்ஆர்ஆம்
கல்லூரிகளில் அட்மிஷன் போடுவதன் மூலமே, எஸ்ஆர்எம் நிறுவன உரிமையாளர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து, எஸ்ஆர்எம் வட்டாரத்தினர் கூறுகையில்,
மதன் எஸ்ஆர்எம் உரிமையாளரின் குடும்பத்தில் சிலருடன் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தார்.