அமைச்சரின் வருகை பிஜெபி மாநில தலைமைக்கே தெரியாமல் ரகசியமாக இருந்தது என கூறப்படுகிறது

Vernacular தேர்தல் 2016 Friday, March 04, 2016 - 21:11

வியாழனன்று, தேமுதிக- பிஜேபி கூட்டணியை குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேட்கர் சென்னை திடீரென சென்னை வந்துள்ளார்.

 

பிரகாஷ் ஜாவேட்கர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திப்பார் என பல்வேறு ஊகங்கள் வெளிவரவே, விஜயகாந்த், இந்த சந்திப்பை தவிர்க்க விழுப்புரம் நோக்கி கிளம்பினார்.

 

இதனால் பிரகாஷ் ஜாவேட்கர், விஜயகாந்தை சந்திக்காமலேயே டெல்லி திரும்ப வேண்டிய நிலை உருவானது.

ஆனால், காலை 11 மணியளவில் சென்னை வந்து சேர்ந்த  ஜாவேட்கரின் வருகையை, பாரதீய ஜனதா தரப்பில் கூட எவருமே அறிந்திருக்கவில்லை. மேலும் தான் வருவதாக, அவர் கட்சியினருக்கு தெரியபடுத்தவில்லை என பாரதீய ஜனதா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

 

ஜாவேட்கர், தனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என கூறி கொண்டது ஊகங்களை இன்னும் அதிகபடுத்தியது.

அப்போது பாரதீய ஜனதா மாநில தலைவரான தமிழிசை சவுந்தராஜன், திருப்பதிக்கு சென்றிருந்தார்.

 

பிரகாஷ் ஜாவேட்கர், விஜயகாந்தின் வீட்டில் ரகசியமாக 12.30 முதல் 1.30 க்கும் இடையில் சந்திக்க கூடும் என செய்திகள் பரவின. ஆனால் விஜயகாந்தின் மனைவி இதனை மறுத்தார். தந்தி டிவி யிடம் அவர் கூறும்போது, விஜயகாந்த் விழுப்புரத்தில் உள்ள  அவரது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சென்றுள்ளார் என கூறினார்.

 

இருப்பினும், ஜாவேட்கர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவையும், அவரது மைத்துனர் சுதீஷையும் சந்தித்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.

 

“ பிரேமலதா மற்றும் அவரது சகோதரரிடம் கூட்டணி குறித்து பேச ஜாவேட்கர் முயன்ற போது, விஜயகாந்த் அவரது தொகுதிக்கு சென்றிருப்பதாகவும், அவர் வந்தில்லாமல் எதுவும் பேசவியலாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஜாவேட்கர் வெறும் கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று “ என பாரதீய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

அதன்பின்னர், அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் சென்னைக்கு வந்ததாகவும், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தில் இருக்கும் தேசிய நீடித்த வளர்ச்சிக்கான கடலோர மேலாண்மை மையத்திற்கு சென்றதாகவும் பின்னர் 5.30 மணியளவில் அவர் திரும்ப சென்றதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பேசிய விஜயகாந்த், தான் எந்த கட்சியுடனும் பேரம் பேசவில்லை என கூறினார்.

 

அமைச்சர் பிரகாஷ் ஜாவேட்கர், கடந்த ஞாயிறு விஜயகாந்தை அவரது வீட்டில் வைத்து சந்தித்து பேசினார். பின்னர் புதன்கிழமை பட்ஜெட் கூட்டம் முடிந்த பின் வருவதாக கூறியுள்ளார். ஆனால் தேமுதிக தரப்பில் அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது.

 

ஆனால் புதன்கிழமை, திமுகவுடன் கூட்டணி பேச்சுக்கள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன என்ற தகவல் பரவியதையடுத்து, ஜாவேட்கர் தனது பயணத்தை புதன்கிழமை மாற்றி வைத்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மத்திய அமைச்சரை வியாழனன்று சந்திக்க தவிர்த்து விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.