இந்த மூன்றுசித்தாந்தங்களும் எங்கள் இரத்தத்தில் ஓடுகின்றன. இந்த சித்தாத்தங்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் எனது மூன்று பிள்ளைகளுக்கும் இந்த பெயரை சூட்டியுள்ளேன் – மோகன்

Tamil TN 2016 Tuesday, April 26, 2016 - 09:54

சேலம் வீரபாண்டி தொகுதியின் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர் பி.மோகன். தனது கட்சியின் தத்துவத்தை வித்தியாசமாக கடைபிடிப்பதுடன், அதனை சொந்தமாகவும்  கொண்டாடிவருகிறார்.

தனது மூன்று மகன்களுக்கும் கம்யுனிசம்,லெனினிசம், சோசலிசம் என்ற பெயரை சூட்டியதன் மூலம், கட்சி கொள்கைகளுடனான , தனது ஒட்டுமொத்த  குடும்பத்தின் உறுதிப்பாட்டையும் பெருமையாக கருதுகிறார். “ இந்த பெயர் இருப்பதால் எங்கள் குழந்தைபருவத்தில் எந்தவித வித்தியாசமான சூழலும் உருவாகவில்லை. கொஞ்சம் கூடுதலாக இனிப்புகளே கிடைத்தன.” என புன்முறுவலுடன் கூறும் கம்யுனிசம் தனது தந்தையின் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறப்பு கவனம் கிடைப்பதாக கூறுகிறார். 24 வயதான கம்யுனிசம் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். ஒரு நேர்காணலின் போது, தனது பெயரை வைத்தே, அந்த முதலாளிக்கு தன்னை பற்றியும், இந்த சித்தாந்தத்தை பற்றியும் அறியும் ஆர்வம் மேலோங்கியதாக கூறுகிறார் அவர். “ ஆனால் நான் தனிக்கவனத்தை பெறும் போது, எனது பெயர் மட்டுமல்ல சித்தாந்தமும் கவனம் பெறுகிறது.” என்கிறார் அவர்.

 

மோகனின் இளைய மகன்களான லெனினிசமும், சோசலிசமும் பி.காம் பட்டபடிப்பு முடித்துவிட்டு சொந்தமாக சில்வர் கொலுசு தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர். “ இந்த மூன்றுசித்தாந்தங்களும் எங்கள் இரத்தத்தில் ஓடுகின்றன. இந்த சித்தாத்தங்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் எனது மூன்று பிள்ளைகளுக்கும் இந்த பெயரை சூட்டியுள்ளேன்.” என்கிறார் மோகன்.

 

“ சிலநேரங்களில், எங்கள் பெயர்கள் என்ன பொருளை கூறுகின்றன என எங்களுக்கு தெரியுமா என சிலர் கிண்டலாக கேட்கின்றனர் “ என கூறும் கம்யுனிசம், அவர்களுக்கு எனக்கு தெரிந்த முறையிலான வாய்வழி விளக்கத்தை கொடுத்துவிடுவதாக கூறுகிறார். அதையும் தாண்டி சிலர் “கம்யுனிசம் செத்து போனதே என சிலர் கூறும் போது,அது பற்றி எனக்கு தெரியாது ஆனால் எனது பெயர் வடிவில் அது இன்னும் வாழ்கிறது என கூறிவிட்டு செல்வேன்.” என்றார் அவர்.

சோசலிசத்திற்கும் கிட்டத்தட்ட இதே அனுபவம் தான். அவர் கல்லூரியில் படிக்கும் போது இந்த பெயரால் சற்று கோபம் அடைந்ததாக கூறினார்.” நீங்கள் சோசலிசம் என்றால் என்ன என என்னிடம் கேட்டால், எனக்கு உண்மையிலேயே தெரியாது.” என தனது அறியாமையை ஒப்புகொள்கிறார் அவர்.

ஒரு கம்யுனிஸ்ட் கட்சியின் குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்த இவர்களது தந்தை, தேர்தலில் முதன்முதலாக போட்டியிடுகிறார். கூடவே அவரது மூன்று மகன்களையும் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்கிறார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.