நடிப்பால் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய ஜிஷ்ணு, பேஸ்புக்கில் பல பாசிட்டிவான தகவல்களை பதிவுகளாக போட்டவர்.

news Friday, March 25, 2016 - 11:01

தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்த, ரசிகர்களை சந்தோஷப்படுத்திய மலையாள நடிகர் ஜிஷ்ணு ராகவன் அலிங்கில் காலமானார். வெள்ளியன்று காலை 8.15 மணியளவில் கொச்சியில் உள்ள  அம்ரிதா மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.

35 வயதான ஜிஷ்ணு, சமூக வலைத்தளத்தில் சிறப்பாக செயல்பட்டவரும் கூட. ஏற்கனவே ஒரு முறை புற்றுநோயால் மீண்ட அவர். மீண்டும் புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளானார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பின், அதிலிருந்து முழுவதுமாக குனமடைந்திருந்தார் அவர்.

மலையாள நடிகர் ராகவனின் மகனான இவருக்கு, கட்டிட கலைஞரான தன்யா ராஜனை திருமணம் செய்து கொண்டார்.

பொறியியல் படித்த இவர், 1987 இல் குழந்தை நட்சத்திரமாக கில்லிபட் என்ற சினிமாவில் நடிக்க துவங்கினார். இருப்பினும் பாவனா, சித்தார்த் நடித்த நம்மள் என்ற சினிமாவே அவருக்கு ஒரு அறிமுகத்தை கொடுத்தது. இதன் பின்னர், அவர் மேலும் நான்கு சினிமாக்களில் நடித்துள்ளார்.

கடந்த மார்ச் 8  அன்று, அவர் பேஸ்புக்கில், எப்போதும் பாசிடிவ்வாக இருப்பதும், சிரித்த முகத்துடனும் இருப்பதும் அதிக வித்தியாசங்களை கொண்டது. நான் இப்போது ஐசியுவில் இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது வீடாக இருப்பதை குறித்து கவலைப்படவில்லை.டாக்டர் வரும்போது நான் தூங்கி கொண்டிருந்தேன்.அவர் வந்த போது எழும்பி புன்னகையை அவருக்கு கொடுத்தேன். அவரும் என்னை பார்த்து சிரித்தார்.அவர் என்னை பார்த்து, ஒரு நோயாளியாக இருந்து சிரிப்பது நல்லது என்றார். அது அவர்கள் சிறந்த முறையில் சிகிச்சையளிக்க, நமக்கு சக்தியை கொடுக்கிறது.நர்ஸ்கள் என்னை கவனிக்க வரும் போதும் சிரிக்க துவங்கினேன். என்னை நம்புங்கள். அது அதிக வித்தியாசத்தை கொடுத்தது. அவர்கள், ஐசியுவில்  கடினமான வேலையை செய்கிறார்கள். நான் சிரிப்பது, சூழலை நல்ல முறையில் மாற்றுகிறது. இது ஒரு மேஜிக். சிரிப்பது ஒரு மேஜிக். ஒவ்வொருவருக்கும் இது தெரியும். ஆனால் எப்படியோ அதனை மறந்துவிடுகிறார்கள். எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இவரது மரணம் மலையாள திரையுலகை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே கலாபவன் மணி, கல்பனா, ஷான் ஜான்சன், ராஜப்பன், ராஜேஷ் பிள்ளை மற்றும் பலர் அடுத்தடுத்து இறந்து போயுள்ளனர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.