அம்மா தனது பிறந்த நாள் கேக்கை வெட்டும் போது, இங்கே தொண்டர்கள் நீரில் மிதத்தல், பச்சை குத்துதல் என படுபிஸியாக இருந்தனர்

Vernacular Thursday, February 25, 2016 - 08:54
எங்கும் நிறைந்து காணப்பட்ட கொண்டாட்டங்கள், ஏராளமான நலத்திட்ட அறிவிப்புகள், தேர்தலையொட்டி விரைந்த செயல்பாடுகள் என முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் காணப்பட்டது.'
 

கட்சியின் சின்னமான இரட்டை இலை பொறிக்கப்பட்ட பிரமாண்டமான 68  கிலோ கேக்கும், கூடவே லட்டுக்களும், கட்சிக்காரர்களுக்கு ராயப்பேட்டையில் உள்ள  கட்சியின் தலைமையகத்தில் வைத்து  விநியோகிக்கப்பட்டது. அதனுடன் கட்சியின் செயலாக்கங்கள் குறித்த துண்டு பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

 

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தை ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். கட்சி தலைமையகத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாமை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

 

அந்த முகாம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.  ஜெனரல் செக் அப், இரத்த தானம், இரத்த அழுத்த பரிசோதனை, ஆகியவற்றுடன் இசிஜி மற்றும் எக்கோ ஸ்கேன்களும் எடுக்கப்படும். கோயம்பத்தூர் மற்றும் திருச்சி மாநகரங்களில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

 

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, சென்னை மாநகராட்சி 68 வித செயல்பாடுகளை செய்வதன் மூலம் கொண்டாட்டத்தை முன்னெடுத்து செல்கிறது.

 

மேற்சொன்ன நடவடிக்கைகள் எல்லாம் இயல்பானவை என்றால், இனி கூறப்போவதோ அக்கட்சியினரின் தரமற்ற நடவடிக்கைகள் எனலாம்.

 

வேளச்சேரியில் நேற்று முன்தினம், நடந்த பச்சை குத்தல் விழா அதில் ஒன்று. சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் தமிழக முதல்வரும், அதிமுக தலைவருமான ஜெயலலிதாவின் படத்தை, பெயருடன், தங்கள் கைகளில் பச்சை குத்தி கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ அசோக்கும் கையில் பச்சை குத்தி கொண்டார். 600 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் 1000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பச்சை குத்தி கொண்டனர். பன்னீர்செல்வம் உட்பட மூத்த அமைச்சர்கள், இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்து அம்மா பேஷன். தங்களது முந்தானையில், ஜெயலலிதா படத்துடன் அதன் கரையில் கட்சி கொடியின் நிறங்களும் நெய்யப்பட்ட  சேலைகளை அணிந்து கட்சி தலைமையகத்தின் வீதிகளில் பெண்கள் வலம் வந்தனர்.

 

ஜெயலலிதா நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்று, அவரது தொண்டர்கள் பாலபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் மதுரை எம்எல்ஏ கருப்பையா இதனையே சற்று வித்தியாசமாக செய்தார். கட்சி கொடியை பற்களில் கடித்து பிடித்த வண்ணம், தண்ணீரில் 48நிமிடங்கள் மிதந்தபடி இருந்தார். அவரது பிரார்த்தனை தான் என்ன ? “ அம்மா எங்கும் நிறைந்துள்ளார். அவர் சாக முடியாது” என்பது தான்.

 

கருப்பையா இதுபோன்று செய்வது முதல் முறையல்ல. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலில் இருந்த போது, இவர் தனது தொகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு அரை நாள் முழுவதும் மிதந்தார்.

இது போன்றே ஒரு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் ‘இரட்டை இலை’. கட்சியின் சின்னமான இதை பத்திரிக்கைகளில் அவரது பிறந்த நாளை குறிக்கும் வண்ணம் வெளிவந்திருந்தது. வெளியாகும் தேதி  குறிப்பிடப்படவில்லை. எனினும்  இதன் ரசிகர்களை, ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கையுடன் நிச்சயம் ஒப்பிட முடியாது.

 

நீரில் மிதத்தல், பச்சை குத்துதல் என உங்களால் இது போன்று எதையும் செய்ய முடியவில்லையா ? மிகவும் எளிது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அழைத்தால் போதும். மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்கள் இதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. எண்கள் 7767020002மற்றும் 044-33124234. இந்த எண்களுக்கு அழைத்து வாழ்த்துக்கள் சொல்வதன் மூலம், தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ள முடியும்.

 

இவ்வாறு வரும் வாழ்த்து அழைப்புகள், பதிவு செய்யப்பட்டு ஜெயலலிதாவிடம் போட்டு காண்பிக்கப்படுமாம். நிமிடத்திற்கு 6000 அழைப்புகள் வருவதாக அவர்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கூறி கொள்கின்றனர்.

 

நீங்கள் மாநகர சுவர்களில் தான் சிவப்பு, வெள்ளை, கருப்பு நிற வண்ணங்கள் அடிக்கப்பட்டிருக்கும் என நினைக்க கூடும், ஆனால் ஜெயசங்கர் என்பவர் தனது உடல் முழுவதும் இப்படி ஒரு நிறகலவையை அடித்து கொண்டு வந்தார்.

 

ஏன் இப்படி ? என்ற கேள்விக்கு “ நான் அம்மாவை நேசிக்கிறேன். அவரது அனைத்து சினிமாக்களையும் இப்போதும் பார்க்கிறேன்” என்றார்.

 

ஜெயலலிதாவை நேரடியாக இதுவரை பார்த்ததில்லை என ஒப்புகொள்ளும் ஜெயசங்கர், தானும் தனது மனைவியும் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் செல்லுவதாகவும், அது தங்களுக்கு உணர்வுபூர்வமாக இருப்பதாகவும் கூறி கொண்டார்.

 

பிறந்த நாள் வாழ்த்துக்கள். அம்மா... நல்ல பொழுது போக வைத்த அவரது கட்சிக்காரர்களுக்கும் நன்றி. நீங்கள் அம்மாவை நேசித்தால் வெறும் ஓட்டு மட்டும் போடாதீர்கள். தண்ணீரில் மிதக்கவும் செய்து கொள்ளுங்கள். 

 

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.