பாரம்பரிய திருமண முறைகளை கண்ட பெரியவர்களுக்கு இது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது

 Copyright Coffee Stains
news Saturday, March 12, 2016 - 09:56

தமிழ் பிராமண குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் வழக்கமாக பாடல்களும், நடனங்களும் நடைபெறுவதில்லை. அவ்வாறு ஏதேனும் நடைபெறும் என்றால் கூட பாரம்பரிய முறைப்படி அவை நடைபெறுவது வழக்கம். இப்படிப்பட்ட சூழலில், தமிழ் பிராமண திருமண நிகழ்ச்சியில் மேற்கத்திய இசை கேட்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள். அதுவும், மணமகனும், மணமகளும் இணைந்து ராக்ஸ்டார் போன்ற மேற்கத்திய இசையை அவர்களது சொந்த திருமண நிகழ்ச்சியில் இணைந்து பாடினால் எப்படி இருக்கும் ?

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரத்தில் சந்தித்து கொண்ட அக்ஷயாவும், ஸ்ரீராமும் ஹெவி மெட்டல் மியுசிக் என்றொரு இசையின் மூலம் தங்களுக்குள் காதலை வளர்த்து கொண்டவர்கள்.

மரிகோல்ட் டேல்ஸில்  துல்ஹான் பிராஸ் பேன்ட் என்ற வாத்திய குழுவின் முதல் சிறப்பு வாய்ந்த நிகழ்வை, மணக்கோலத்தில் இருந்த புதுமண தம்பதிகள் துவக்கி வைத்த போது, திருமணத்தில் கலந்து கொள்ள விருந்தினர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. பாரம்பரியமான, நீல நிற சேலையையும், தங்க நகைகளையும், தலையில் மல்லிகை பூக்களையும் அணிந்திருந்த அக்ஷயாவின் முகத்தில் மணப்பெண்ணிற்கான வெட்கத்தை காண முடியவில்லை. அக்ஷயா பாடி கொண்டிருக்க, வேட்டி அணிந்திருந்த ஸ்ரீராமோ, ட்ரம்ஸ் வாசித்து கொண்டிருந்தார்.

“நாங்கள் பாடப்போகிறோம் என அவர்களிடம் கூறிய போது, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், சம்மதித்தார்கள். நாங்கள் திருமண ஏற்பாடுகளில் கொஞ்சம் உற்சாகமான சூழலை உருவாக்கினோம் ”. என கூறினர் புதுமண தம்பதிகள்.

ஸ்ரீராமும், அவரது நண்பரும், அமெரிக்காவில் தங்கள் வாத்திய குழுவிற்கான பாடகரை தேடி அலைந்த போது, அக்ஷயாவை சந்தித்தார். அவர்களை பொறுத்தவரை, அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பாடுவது உணர்வுபூர்வமானது.

இந்த தம்பதிகளை பொறுத்தவரை, தமிழ் பிராமண திருமண நிகழ்ச்சியில் முற்றிலும் வித்தியாசமான ஒரு இசை நிகழ்ச்சியை விருந்தினர் ரசிக்க கொடுக்க வேண்டும் என விரும்பினர்.

 “ திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறுபது மற்றும் எழுபது வயது கடந்தவர்களின் முகத்தில் ஆச்சரியத்தை நாங்கள் இசை நிகழ்ச்சியை நடத்திய போது காண முடிந்தது. பாரம்பரியமான திருமண நிகழ்ச்சியில், நாங்கள் சற்று வித்தியாசமான முற்போக்கான இசை நிகழ்ச்சியை நடத்தியது திருமண நிகழ்ச்சியில் முக்கியமான கட்டம்.” என அக்ஷயா கூறினார்.

மேலும், திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மிகுந்த கைத்தட்டலுடன், உற்சாகப்படுத்தியது மிகவும் அழகாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றார் அக்ஷயா.

ஸ்ரீராம் கூறுகையில், “ அவர்கள் வழக்கமாக பிரகாசமான மணப்பெண்ணை கொண்டு கொண்டாடியிருப்பார்கள். இப்போது தான் பாடல் பாடும் மணப்பெண்ணை கொண்டாடுகிறார்கள்.” என கிண்டலாக கூறினார்.

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.