நடமாடும் என்சைக்ளோபீடியா என அழைக்கப்பட்ட இவர் இன்று காலை மரணமடைந்தார்.

 Tamil Web/YouTube
Vernacular Tamil Nadu Monday, March 21, 2016 - 12:56

புகழ்பெற்ற தமிழ் சினிமா வரலாற்றாளர் “ப்லிம் நியூஸ் ஆனந்தன் “ இன்று காலை (திங்கள்கிழமை) 11 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 88 . இதனை நியூஸ் மினிட்டிடம் கூறிய அவரது மகன் டயமன்ட் பாபு, கடந்த ஒரு வார காலமாகவே, அவர் மூச்சு திணறலால் மயிலாப்பூர் இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறினார். மேலும் அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

சினிமாத் துறையில் செய்தி சேகரிக்கும் பல செய்தியாளர்களுக்கும் ஆனந்தன் ஒரு மிகப்பெரிய இழப்பு ஆகும்.

இதுகுறித்து சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை கூறுகையில்” ஆனந்தன், சினிமா செய்திகளுக்கான ஒரு மதிப்பு மிகு சொத்தாக இருந்தார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியாவாக  இருந்தார்.1950 களிலிருந்து. தொடர்ந்து பல பத்தாண்டுகளாக பல தகவல்களை தன்னிடம் வைத்துள்ளார். இதற்காக, சிறந்த முறையில் கோப்புகளையும் அவர் பேணி வந்தவர்.” என்றார்.

1954 இல் ஒரு சினிமா சம்பந்தமான  பத்திரிகையில் பணியில் சேர்ந்த போது, ஆனந்தன் தனது பெயருடன் “ப்லிம் நியூஸ் “ என்ற அடைமொழியை சேர்த்து கொண்டார். கூடவே, சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் ஆப் காமர்சிலும் வேலை செய்தவர்.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கே.ஆர். விஜயா, ஜெயலலிதா, சிவகுமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்த படங்களை பற்றிய தரவுகளை ஒன்று விடாமல் சேகரித்து வைத்துள்ளார்.

1991 இல் ப்லிம் நியூஸ் ஆனந்தனுக்கு கலைமாமணி விருது, தமிழக அரசால்  வழங்கப்பட்டது.1989இல் சினிமா இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் “கௌரவ இயக்குனர்” என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.