கடந்த 2014 இல் குற்றவாளி என பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்கு பின், ஜெயலலிதா ஊடகங்களை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளார்

 PTI photo
Tamil TN 2016 Monday, May 16, 2016 - 15:18

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இன்று காலை 10 மணியளவில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின், அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் “ இரண்டு நாட்களுக்கு பின் மக்கள் தீர்ப்பு என்ன என்பதை நாம் அறிந்து கொள்வோம்” என்று கூறினார்.

திமுக தலைவர்களான கருணாநிதியும், ஸ்டாலினும் தங்கள் வெற்றியை உறுதியுடன் தெரிவிக்கையில், அதிமுக தலைவர் ஜெயலலிதாவோ, இதற்கு முன் இல்லாத வகையில், வாக்குச்சாவடியில் தெளிவற்ற பதிலை கூறி சென்றுள்ளார்.  இதற்கு முன்னர், கடந்த 2009 இல், ஜெயலலிதா தேர்தலுக்கு பிந்தைய பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணி குறித்து எழுந்த ஊகங்களை வாக்குசாவடியில் வைத்தே தெளிவுபடுத்தி கூறினார். அப்போது அவர், தேர்தலுக்கு பின் அவ்வாறு பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார்.

ஆனால், 2014 இல் குற்றவாளி என பெங்களூர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வந்தது முதல் ஊடகங்களை பெருமளவில் தவிர்த்து வந்துள்ளார். திமுகவின் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து ஊடகங்களை இந்த தேர்தலின் போது சந்தித்த நிலையில், ஜெயலலிதா, ஒரு நேர்காணலை கூட ஊடகங்களுக்கு வழங்கவில்லை. அதுபோன்றே ஒரு செய்தியறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News, views and interviews- Follow our election coverage.

Click TN Election Special

Click Kerala Election Special

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.