
சரித்திர சாதனைமிக்க வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இது. குடும்ப ஆட்சிக்கும் நிரந்தரமான முற்றுப்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மக்களை நம்பாமல் கருத்துகணிப்புகளை எதிர்பார்த்த கட்சிக்கு கிடைத்த தேர்தல் இது.
என் மீது நம்பிக்கை வைத்து, எனது வேண்டுகோளை ஏற்று அளப்பரிய வெற்றியை அதிமுகவுக்கு ஈட்டி தந்த தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டு இருப்பேன். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற அயராது உழைப்பேன்.
வெற்றிக்காக உழைத்த, கூட்டணி கட்சியினர், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்றே கேரளாவில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன் என கூறியுள்ளார்.