நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

Tamil TN 2016 Monday, May 16, 2016 - 15:03

தமிழகம் முழுவதும் இன்று (மேய் 16) மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையில் , அரசியல்வாதிகள், நடிகர்கள் உட்பட உள்ள விஐபிக்கள் பலரும் தங்கள் வாக்குரிமையை காலையிலேயே செலுத்தினர்.

சென்னை கோபாலபுரம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள தேர்தல் வாக்கு சாவடிகளில் விஐபிக்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில்,

திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ சாரதா மேல்நிலை பள்ளி சாவடியிலும், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடியிலும், நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் திருவான்மியூர்,  குப்பம் பீச் ரோட்டில் அமைந்துள்ள அரசு பள்ளியின் வாக்கு சாவடியிலும் வாக்குகளை அளித்தனர். அது போன்றே நடிகர் கமலஹாசன் தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி கூட வாக்குச்சாவடியிலும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டிஜி வைஷ்ணவ கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியிலும் தங்கள் வாக்குகளை அளித்தனர். என குறிப்பிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா வாக்களிக்க செல்லும் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குசாவடியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் மட்டுமே அந்த வாக்குச்சாவடி வளாகத்தினுள் காரில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.