வெற்றி பெற்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கனவே பல சினிமாக்களில் பின்னணி பாடல்கள் பாடியவர்

Vernacular Tamil Nadu Tuesday, March 22, 2016 - 13:23

சென்னைவாசியான  ஆனந்த் அரவிந்தாக்ஷன் விஜய் டிவியின் “சூப்பர் சிங்கர் 5 “ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிகிழமை இரவு, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டிபி ஜெயின் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியான அறிவிப்பை தொடர்ந்து, இதுகுறித்த ஒரு பேஸ்புக் பதிவு, சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

அந்த பேஸ்புக் பதிவில், சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அரவிந்தாக்ஷன், பல சினிமாக்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளவர் என கூறுகிறது. இந்த நிகழ்ச்சியானது, கடும் போட்டி நிறைந்த இந்த தளத்தில், புதிய திறமைமிக்கவர்களை கண்டறிந்து வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது என அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் ஆனந்த் ஏற்கனவே இந்த தளத்தில் நன்கு கால் பதித்துவிட்டார். அவரது பெயர், ஏற்கனவே 10 சமீபத்திய சினிமாக்களில் உள்ள பாடல்களில், அவர் பாடிய பாடல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கீழே, ஆனந்த் அரவிதாக்ஷன் குறித்த பேஸ்புக் பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. 

 

2012 இல் வெளிவந்த ஆரோகணம் சினிமாவில் உள்ள பாடலை பாடியவர்களில் லிஸ்ட் 

 

சுந்தர பாண்டியன் என்ற மற்றொரு பிரபல சினிமாவில் ( நன்றி :விக்கிபீடியா )

 

2012 இல் வெளியான மற்றொரு சினிமாவான நீர் பறவை 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.