தமிழக சோலார் மின்திட்டத்தில் அதானி குழுமத்தின் வழக்கறிஞரே அடுக்கடுக்காய் கூறும் குற்றச்சாட்டுக்கள்

தமிழக அரசோ அல்லது மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ இதுகுறித்து விசாரணை நடத்துமா?
தமிழக சோலார் மின்திட்டத்தில் அதானி குழுமத்தின் வழக்கறிஞரே அடுக்கடுக்காய் கூறும் குற்றச்சாட்டுக்கள்
தமிழக சோலார் மின்திட்டத்தில் அதானி குழுமத்தின் வழக்கறிஞரே அடுக்கடுக்காய் கூறும் குற்றச்சாட்டுக்கள்
Written by :

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், அதானி குழுமத்தால் துவங்கப்பட்டுள்ள 648  மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்  மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த குழுமத்தின், வழக்கறிஞரே நிலம் வாங்குவதில் உண்டான விதிமீறல்களையும், ஒழுங்குமீறல்களையும் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 2015 இல் அதானி குழுமம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி சூரிய மின்திட்டத்தை உருவாக்கவும், அதிலிருந்து மின்சாரத்தை தமிழக அரசிற்கு வழங்கவும் யூனிட் ஒன்றிற்கு ரூ. 7.01 என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் அதானி குழுமம், சென்னை ஹைகோர்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு மனுவை போட்டுள்ளது, அதில் தங்களது குழுமம் சார்பில் வாதாட வரும் வழக்கறிஞர் கபிலன் மனோகர், தனக்கு வழக்கு நடத்துவதற்கான சம்பளத்தை அதிகரித்து தரவில்லை எனில் இந்த திட்டத்தை பற்றிய தகவல்களை வெளியிடபோவதாக மிரட்டுகிறார். எனவே இந்த திட்டத்தை பற்றிய தகவல்களை வெளியிட அவருக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதானி குழுமத்தின் இத்தகைய, மனுவை விசாரித்த நீதிபதி சசிகரன், இந்த மனுவில் முகாந்திரம் இருப்பதாக கூறி, வழக்கறிஞர் கபிலன் தனது வாடிக்கையாளரான அதானி குழுமத்திற்கு எதிராக எந்தவித தகவல்களையும் வெளியிடக்கூடாது என ஒரு இடைக்கால தடைவிதித்துள்ளது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனக்கு வழக்கு நடத்துவதற்கான சம்பளம் கூடுதலாக தரக்கேட்டு அதானியின் வழக்கறிஞர் தனது கடிதத்தில் எழுதிய , “மோசடி மற்றும் சட்டவிரோத செயல்கள்” என வரிசைபடுத்திய பட்டியல்களை உள்ளடக்கியுள்ளார். இதன் விளைவாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விதிமீறல்கள் வெளி உலகுக்கு அரசல்புரசலாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஹைகோர்ட்டால், அதானியின் வழக்கறிஞர் வரிசைப்படுத்திய விதிமீறல்களின் விபரம்.

1.       கீழ்மட்டத்தில் நடந்த சட்ட விரோத நில பரிமாற்றம்.

2.       விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது

3.       தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு (PPA) தேவையான  விதிமுறைகளை பூர்த்தி செய்ய சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் ஆவணங்களை தயார் செய்திருப்பது. இதே ஒப்பந்தத்தை கொண்டு ரூபாய் 2300 கோடி வரை இண்டசிந்த் வங்கி, எஸ்பிஐ கேப்ஸ், மற்றும் ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கிகளில் கடன் எடுத்திருப்பது.

4.       இது தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் பொருட்களின் தகவல்களை வெளிப்படையாக அறிவிக்காததன் மூலம் செபியின் விதிமுறைளை மீறியிருப்பது.

மேலும், இந்த திட்டத்தில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளதாகவும், விதிமுறைகளை மீறி, குறுக்கு வழியில் ரகசியமாக, நடைமுறைகளை தகர்த்து இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளதாகவும் அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகள் பல இதில் இருந்தும் அரசியல் ஆதரவுடன் இந்த திட்டம் முன்னோக்கி செல்கிறது என சுட்டிக்காட்டி உள்ளார்.

கேள்வி என்னவென்றால் இந்த விதிமீறல் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டிய தேவை என்ன ? என்பது தான். இந்த திட்டமே தமிழக அரசுடன் ஏற்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தபடுகிறது. டெண்டர் விட்டு விலை கேட்கும் நிலை இதில் இல்லாததால், இங்கு போட்டியாளர்களுக்கான பேச்சே எழவில்லை. இந்த மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம்  (PPA) செய்து கொள்ள மின்பகிர்மான கழகத்துடன் காட்டிய அவசரத்தால்  ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது என வழக்கறிஞர் குற்றஞ்சாட்டுகிறாரா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனை அறிய நாம் ஜூலை 2015 இல் நடந்த மற்றொரு சர்ச்சையை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை வாரியம், சோலார் மின்சாரத்திற்கான விலையை நிர்ணயிப்பதற்கான கட்டுப்பாட்டு கால அளவை நீட்டி ஒரு சூ மோட்டோ உத்தரவை வெளியிட்டது. அதனடிப்படையில், அதானி குழுமத்தை ஒரு பயனாளியாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம், தன்னிச்சையாகவே தீர்மானித்தது.

அதனை தொடர்ந்து ஆணையத்தின் உத்தரவின் பயனாக அதானி குழுமம், சந்தை விலையை விட அதிக விலையான, ஒரு யூனிட்டுக்கு  7.01 ரூபாய்க்கு மின்சாரத்தை விநியோகிக்கும் வாய்ப்பை பெற்றது. அதேவேளை இதே அதானி குழுமம் மத்திய பிரதேசத்திற்கு சோலார் மின்சாரத்தை ரூ 6.04 ரூபாய்க்கு விநியோக்கிக்க சம்மதித்திருந்தது கவனிக்கத்தக்கது.

மின்சார ஒழுங்குமுறை வாரியத்தால் கட்டுப்பாட்டு கால அளவு நீட்டிக்கபடாமலிருந்தாலோ அல்லது அதானி குழுமம் மார்ச் 2016 க்குள் உற்பத்தியை துவங்காமல் இருந்தாலோ, அவர்கள் 7.01 ரூபாய்க்கு மின்விநியோகம் செய்ய இயலாது. இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள ஒரு உறுப்பினராலேயே வெளிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அதானி குழுமம் பயன்பெறும் வகையில் கால அளவை நீட்டி கொடுக்கவும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

சமூக ஆர்வலர்களும், தொழில் துறை விமர்சகர்களும் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இதில் தலையிட அதிகாரம் உள்ளது. இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆணையம், சம்பந்தப்பட்ட லைசன்ஸ்தாரரை விசாரிக்கவும்,தமிழ்நாடு மின்வாரிய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்க வேண்டும்.” என கூறுகிறார் முன்னாள் மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நாகல்சாமி.

ஆனால் தற்போது உறுப்பினராக இருக்கும் அக்ஷய்குமார் நியூஸ் மினிட்டிடம் அப்படி தலையிட ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றார். ” யாரிடமிருந்தேனும் இது குறித்து புகார் வந்தில்லாமல் நாங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது.” என்றார்.

அதானி குழுமம் பயன்பெறும் வகையில், ஆணையத்தால் 2015 இல் கட்டுப்பாட்டு கால அளவை நீட்டித்து வெளியிடப்பட்ட சூ மோட்டோ உத்தரவில் அக்ஷய் குமாரும் கையெழுத்திட்ட உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசுக்கு வாங்க வேண்டிய ஒரு தேவையும் இல்லை என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.” அவர்கள் சோலார் மின்சாரத்தை வாங்க வேண்டியது கடமை என கூறிகொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அந்த உத்தரவு இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை. புதுப்பிக்ககூடிய கொள்முதல் பொறுப்பு, சோலார் மின்சாரத்தை பொறுத்தவரை மொத்த கொள்முதலில் 0.05% தான். தமிழ்நாடு மின்சார வாரியம் அதனை இப்போது நிவிர்த்தி செய்கிறது.” என்றார் சென்னையை சேர்ந்த காந்தி.

நாகல்சாமியும்,காந்தியின் கருத்தான இது தேவையற்ற திட்டம் என்பதை ஒப்புகொண்டார்.” எனக்கு புரியாதது என்னவென்றால் ஏன் எவருமே இதை ஒரு பிரச்சினையாக்கவில்லை என்பது தான். அதானியின் வழக்கறிஞரே இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார் எனில் இது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார். 

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com