நாங்கள் இன்னும் சில மாதங்கள் இங்கே இருந்தால் முதலாளிகள் எங்களை கொன்று விடுவார்கள் என பயத்துடன் கூறுகிறார் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கலைவண்ணன்

Tamil Monday, May 30, 2016 - 19:45

சவுதியில் தாங்கள் துன்புருத்தபடுவதாகவும், விரைவில் தங்களை மீட்க வேண்டும் என்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த தொழிலாளிகள் மூன்று பேர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கோதவிளாகம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் கலைவண்ணன், எபனேசர் லூக்காஸ், ராமன். இவர்கள் மூவரும் கடந்த மேய் 2015 இல் சவுதிக்கு டிரைவர் வேலை தரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்ற பின், சவுதி முதலாளிகள் உறுதியளித்தபடி டிரைவர் வேலை தராமல், ஆடு மேய்க்க விட்டுள்ளதாக இந்த மூவரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கலைவண்ணன் சுயமாக எடுக்கப்பட்ட வீடியோவில் மத்திய அரசு தங்களை இந்த ஆபத்திலிருந்து காப்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், எங்களை இங்கு ஆடு மேய்க்க சொன்னார்கள். அதெல்லாம்  முடியாது என்றோம். வேலை செய்ய முடியாது எனில் இங்கு நீங்கள் இருக்க முடியாது என கூறிய அந்த முதலாளி, எங்களை ஒரு வீட்டில் அடைத்து போட்டு மூன்று நாட்களாக சாப்பாடு தரவில்லை” என கூறும் அவர், தொடர்ந்து கூறுகையில் ஒரு முறை ஆடு ஒன்று செத்து போனபோது, கழுத்தை இறுக்கி முதலாளி கொல்ல முயற்சித்தார் எனவும் கூறுகிறார்.

“ நான் பசியுடனேயே இருக்க முடியாது என்பதால் ஆடு மேய்க்க ஒப்பு கொண்டு தற்போது ஆடு மேய்த்து வருகிறேன்” என கூறினார் அவர். மேலும் தங்களை இந்த நிலையிலிருந்து மீட்கவில்லையெனில் அவர்கள் தங்களை கொன்று விட வாய்ப்புள்ளதாகவும் பீதியுடனே குறிப்பிடுகிறார்.

ஆகவே தங்களை மீட்கும் படி , அரசுகளை அவர் கேட்டு கொண்டுள்ளார்.

 

வீடியோ கீழே

 

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.