30000 க்கும் அதிகமான மக்கள் இந்த போனுக்காக பணத்தை கட்டினர். 7 கோடி பேர் போனிற்காக பதிவு செய்துள்ளனர்.

 251 Image: PTI
news Tuesday, March 01, 2016 - 11:48


நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சமீபத்தில் ரூ.251 க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளை தொடர்ந்து அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை திரும்ப கொடுக்க துவங்கியுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ,ரிங்கிங்பெல்ஸ் இயக்குனர் மோகித் கோயல் பேசிய போது  “எங்களை பற்றிய எண்ணற்ற எதிர்மறை கருத்துக்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. அதனால் நாங்கள் போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குபோது மட்டும் பணத்தை பெறலாம் என முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே போனிற்காக முன்பதிவு செய்தவர்களிடமிருந்து பெற்ற தொகையை திரும்ப செலுத்தி வருகிறோம். அத்துடன் அவர்களுக்கு பொருளை கொடுக்கும் போதே பணத்தை செலுத்தும் வசதியை வழங்குகிறோம்” என்றார்.

30000 க்கும் அதிகமான மக்கள் இந்த போனுக்காக பணத்தை கட்டினர். 7 கோடி பேர் போனிற்காக பதிவு செய்துள்ளனர். பண பரிமாற்றங்கள் சிசிஅவென்யு மற்றும் பேய்யுபிஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் நடந்தது.

தொடர்ந்து பேசிய கோயல், “ எங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை முன்கூட்டியே பெற நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு உதவ, முதலீட்டாளர்கள் உள்ளனர். விலையை நிர்ணயிக்க ஒரு வணிக முறை ஒன்று உள்ளது. எங்களிடம் நம்பகமான திட்டம் ஒன்று உள்ளது. அதை இப்போதைக்கு முழுமையாக நான் வெளிப்படுத்தவில்லை “ என்றார்.

அதோடு, ப்ரீடம் 251 மொபைல் போனை டெலிவரி செய்வது ஏப்ரல் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கிறோம். அப்போதே அதன் இரண்டாம் கட்ட முன்பதிவையும் துவங்க நினைக்கிறோம் என கூறினார்.

“ எங்களது பேமென்ட் கேட்வே கம்பெனிகளான சிசிஅவென்யுவும், பெய்யுபிஸ்சும் புதன்கிழமை வரை வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த காலஅவகாசம் கேட்டுள்ளன. அதன்பின்னர் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் போது பணத்தை கொடுத்து பொருளை பெறுவதற்கான ஒப்புதல் மெயிலை அனுப்புவோம்” என கோயல் கூறினார்.

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா, இந்த வகை போனை உற்பத்தி செய்ய ரூ.2500 வரை செலவு ஆகும் என முன்னரே கூறியது குறிப்பிடத்தக்கது. இதனை சில வழிமுறைகள் மூலம் குறிப்பாக அடக்க விலை மேலாண்மை, புதுமையான சந்தைப்படுத்தல், வரி குறைப்பு, இணைய வழி விற்பனை ஆகியவற்றின்மூலம் சாத்தியப்படுத்த முடியும்.

“இதை இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் எங்களால் 13.8 % வரியை குறைக்க முடியும்.அதுமட்டுமல்லாது, நாங்கள் ஆன்லைனில் விற்பதன் மூலம், டிஸ்ட்ரிபியூஷனுக்கான செலவை குறைக்க முடியும்.” என்றார் அவர்.

மேலும் அரசு மானியம் இந்த போனுக்கு கிடைக்கிறது என்ற ஊக கருத்தை சத்தா மறுத்தார்.

“நொய்டா மற்றும் உத்தராஞ்சல் ஆகிய இரண்டு பகுதிகளிலுமிருந்து தான் இந்த போன் உற்பத்தி செய்யபடுகிறது.250 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிளாண்டுகள் ஒவ்வொன்றும் 5 லட்சம் போன்களை உற்பத்தி செய்யும் திறனுடையது. இதற்கான பணம் கடனாகவும், பங்காகவும் எங்களுக்கு கிடைக்கிறது.” என்ரு சத்தா கூறினார்.

எப்படியாயினும், சில அரசியல்வாதிகளும், இதே துறையில் இருக்கும் சிலரும் இந்த போன் குறித்து தங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். தொலைதொடர்பு துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப துறையை இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.


251 ரூபாய்க்கு மொபைல் போன் வழங்குவதாக கூறும் இந்த ரிங்கிங் பெல் நிறுவனம் தற்போது சுங்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளது.

வருமான வரித்துறை இந்த கம்பெனியின் நிதி ஒழுங்கை பற்றியும், அது தொடர்பான பிற ஆவணங்களையும், கூடவே கம்பெனி பதிவாளர் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்து வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.