குழந்தை தொழிலாளியாக வேலை பார்த்த சிறுவனை அனாதையாக ரயில் நிலையத்தில் விட்ட பேக்கறி உரிமையாளர்

காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை வாங்கியதாக சிறுவன் தகவல்
குழந்தை தொழிலாளியாக வேலை பார்த்த சிறுவனை அனாதையாக ரயில் நிலையத்தில் விட்ட பேக்கறி உரிமையாளர்
குழந்தை தொழிலாளியாக வேலை பார்த்த சிறுவனை அனாதையாக ரயில் நிலையத்தில் விட்ட பேக்கறி உரிமையாளர்
Written by:

கோயம்பத்தூரை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் சமீபத்தில் போடனூர் ரயில் நிலையத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டான். இதனை தொடர்ந்து போலீசார் இச்சம்பவத்தை குறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர். அச்சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மங்களூருவில் உள்ள பேக்கறி கடை ஒன்றில் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு அமர்த்தப்பட்டான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சிறுவனின் பெற்றோர் கோயம்பத்தூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பேக்கறி கம்பெனி உரிமையாளர் லிங்கராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் சப் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன் கூறுகையில், “ அந்த பையனின் தந்தை அவனை இந்த கம்பெனியில் வேலைக்கு விட்டுவிட்டு போய்விட்டார். அதனால், அந்த கம்பெனியின் உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு எங்களுக்கு திட்டமில்லை. நாங்கள் அவரை இந்த வழக்கிற்காக வெறுமனே விசாரிக்கிறோம் அவ்வளவே” என்றார்.

ஆனால், விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும், விசாரணை முடிவில் தக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் கோயம்பத்தூர் காவல்துறை ஆணையர் கூறினார்.

கடந்த வருடம் 13 வயதான பிரவீன் குமார், இனிப்பு தயாரிக்கும் கம்பெனிக்கு வேலை செய்வதற்காக தனது தந்தையாரால் அழைத்து செல்லப்பட்டார். அங்கு இனிப்புகளை பேக் செய்யும் வேலை பிரவீணுக்கு கொடுக்கப்பட்டது, “ நாங்கள் மிகவும் ஏழை மக்கள். எனது தந்தை பழைய செய்தித்தாள்களை விற்கும் வேலை செய்து வருகிறார். நாங்கள் இரண்டு மூத்த சகோதரர்கள் கட்டுமான பணிகளில் சித்தாளாக வேலை செய்து வருகிறோம்.” என்றார். பிரவீணின்  மூத்த சகோதரர்களில் ஒருவரான 27 வயதான சுதாகர்.

ஆறு மாதங்களுக்கு முன் இவர்களின் தந்தை மந்தாராம் மரணமடைந்து விட்டார். “ அந்த கம்பெனி உரிமையாளர் எனது தந்தையின் இறுதி சடங்குக்கு கூட எனது தம்பியை அனுப்பி வைக்கவில்லை. நாங்கள் அந்த கம்பெனிக்கு சென்று அவனை பார்க்க சென்ற போது, அவர் எங்களை பார்க்க அனுமதிக்காமல் அவன் இங்கு இல்லை என்று எங்களிடம் கூறினர் “ என்று  கூறினார் சுதாகர்.

மேலும் அவர், எப்போதெல்லாம் நாங்கள் பிரவீணிடம் பேச முயற்சித்தோமோ அப்போதெல்லாம் அவன் அழுது கொண்டே பேசியதாகவும், அதனை தொடர்ந்து உரிமையாளர் போனை அவனிடமிருந்து வாங்கி அப்புறப்படுத்துவார் எனவும் கூறினார்.

கடந்த ஒரு வருடம் பிரவீன் இல்லாத போது, அவனிடம் 8 முறை பேசியதாக அவனது குடும்பத்தினர் கூறுகின்றனர். அங்கு வேலை செய்த சூழல் பற்றி பிரவீண் நியுஸ் மினிட்டிடம் கூறுகையில், “ நான் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். நாங்கள் அந்த கம்பெனியில் வேலை செய்து அங்கேயே தூங்கவும் வேண்டும்.” என கூறிய பிரவீண் தங்களுக்கு உணவு வேளா வேளைக்கு கிடைத்த்தாகவும் கூறினான்.

சமீபத்தில் சுதாகரின் திருமணம் நடந்த போதும் கூட பிரவீண் வீட்டுக்கு வர அனுமதிக்கப்படவில்லை. “ நாங்கள், திருமணத்திற்கேனும் அவனை அனுப்பி விடும்படி அந்த கம்பெனி உரிமையாளர்களிடம் கெஞ்சி கேட்டபோதும் அவர்கள் அனுப்பவில்லை” என்றார் சுதாகர்.

இத்தகைய சூழலில் கடந்த ஜூன் 14 அன்று பிரவீணுடன் பேச முடியாத நிலையை தொடர்ந்து அவனது குடும்பத்தினர் ஆறுமுகம் என்பவரின் உதவியுடன் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். “ போலீஸ் விசாரணை துவங்கியதும், கம்பெனியின் உரிமையாளர்கள் அவனை போடனூர் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.” எனக் கூறுகிறார் 65 வயதான ஆறுமுகம்.

மேலும் அவர், பிரவீண் கடந்த ஒரு வருடமாக வேலை செய்த சம்பளத்தை அவனுக்கு வழங்கவில்லை எனவும், அவனை ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட்ட போதும் எந்த பணமும் அவனுக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.” பிரவீண் அவன் அணிந்திருந்த ஒரு ஜோடி துணியுடன் மட்டுமே வந்திருந்தான். மற்றபடி அவனுடைய எந்த பொருளையும் அவன் எடுத்து வர அவர்கள் அனுமதிக்கவில்லை” என கூறினார் ஆறுமுகம்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com