பெங்களூரை சேர்ந்த மூன்று இளம் நாட்டிய கலைஞர்களின் புது முயற்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு

 Screengrab
Tamil Monday, June 13, 2016 - 16:21

தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரதநாட்டியத்தை ஆங்கிலப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படி பரதநாட்டிய வீடியோ ஒன்று யூடியுபில் கலக்கி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகியான எல்லி கோல்டிங்கின் மனதை வருடும் ஆங்கில பாடலான ‘லவ் மீ லைக் யு டு ‘ என்ற பாடலின் பின்னணியில் நமது பாரம்பரிய நடன கலையான பரதநாட்டியம் ஆடப்படுவதை யுடியுபில் எண்ணற்றோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

பெங்களூரை சேர்ந்த  நாட்டிய கலைஞர்கள் பிரியா வருணேஷ் குமார், பிரமிதா முகர்ஜி, மற்றும் சந்தியா முரளிதரன் ஆகிய மூவரால், இரண்டு நிமிடம் ஓடுமளவில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த வீடியோ கடந்த நவம்பர் 2015 இல் யூடியுபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மிகக்குறைந்த காலத்திலேயே இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன், பல சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதுகுறித்து, பியாஹ் நடன கம்பெனியின் நிறுவனரான பிரியா வருணேஷ் குமார், இந்த வீடியோ பெங்களூரை அடுத்த மார்த்தஹள்ளியில் ஒரு கட்டிடத்தின் வாயிலில் வைத்து எடுத்ததாக நியுஸ் மினிட்டிடம் கூறினார். ’50 ஷேட்ஸ் ஆப் கிரே ‘ என்ற சினிமாவில் எல்லி கோல்டிங்சின் இந்த பின்னணி பாடலுக்கான காட்சியை தான் பரதநாட்டியம் ஆடும் திட்டமிடுவதற்கு முன் பார்த்ததில்லை என கூறுகிறார் பிரியா.

இருப்பினும், இவர்களின் இத்தகைய முயற்சிக்கு, பழமையை விரும்பும் பரதநாட்டிய கலைஞர்களிடமிருந்து விமர்சனம் வந்துவிடுமோ என பயந்ததாக கூறுகிறார் இவர். ஆனால், இந்த வீடியோ வெளியான பின், பிரியாவிற்கும் அவரது சக தோழிகளுக்கும் நாட்டிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது.

வீடியோவை காண ..

 

Show us some love! Support our journalism by becoming a TNM Member - Click here.