சென்னை விடுதியில் யாருக்குமே தெரியாத வகையில் வாழ்ந்த சுவாதியை கொன்ற கொலையாளி

ராம்குமார் கடந்த மூன்று மாதங்களாக ஏ.எஸ்.மேன்ஸனில் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 404 இல் வசித்து வந்துள்ளான்
சென்னை விடுதியில் யாருக்குமே தெரியாத வகையில் வாழ்ந்த சுவாதியை கொன்ற கொலையாளி
சென்னை விடுதியில் யாருக்குமே தெரியாத வகையில் வாழ்ந்த சுவாதியை கொன்ற கொலையாளி
Written by :

சூளைமேட்டில் உள்ள சௌராஷ்டிரா 8 வது தெருவில் இருக்கும் பச்சை நிற வண்ணம் பூசப்பட்ட முகப்பை உடைய ஏ.எஸ். மேன்ஸன் எந்தவித பிரச்சினையும் இல்லாத ஒன்றாகவே தோன்றும். ஆனால், சுவாதியை கொன்ற கொலையாளி இந்த தங்கும் விடுதியில் தான் தங்கியிருந்தான் என வெளியுலகுக்கு தெரிந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இதுவும் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது எனக் கூறலாம்.

கடந்த மூன்று மாதங்களாக ராம்குமார் இந்த தங்கும் விடுதியில் உள்ள 2 வது மாடியில் அறை எண் 404 இல் தங்கியிருந்துள்ளான்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையாளர் டிகே ராஜேந்தர் கூறுகையில், “ராம்குமார் சுவாதியுடன் பழக வேண்டும் என்ற ஆர்வத்தில் பின்தொடர்ந்துள்ளான். அவனது இந்த முயற்சியை சுவாதி கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததை அவன் புரிந்து கொண்டதால் இந்த கொலையை அவன் செய்தான்.” என்றார்.

இளம் பொறியியல் பட்டதாரியான ராம்குமார் சென்னைக்கு வேலை தேடும் நோக்கில் வந்துள்ளான். அதிகளவில் வெளியில் தென்படும் பழக்கம் இல்லாததால் அவனை உள்ளூர் மக்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

ராம்குமார் தங்கியிருந்த விடுதி, சுவாதியின் வீடு இருக்கும் கங்கை அம்மன் தெருவிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே உள்ளது. இரு தெருக்களுமே குறுக்காக நேரெதிராக அமைந்துள்ளன.

60 அறைகளை கொண்ட இந்த தங்கும் விடுதியில், சில அறைகளில் 2 பேரும், சில அறைகளில் 4 பேரும் என 200க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்த தங்குவிடுதியில் கடந்த 4 வருடங்களாக வசித்து வரும் சதீஸ் நியூஸ்மினிட்டிடம் கூறுகையில், “ இன்று காலை வரை சந்தேகப்படும்படியான ஒரு நபர் இங்கு தங்கியிருந்ததாக தெரிந்திருந்தோம். பலரும், கடந்த 24 ஆம் தேதி கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளி ராம்குமார் தான் இங்கு தங்கியிருந்ததாக கூறினர். எங்களில் பலரும் சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். ஆனாலும் எங்களால் அந்த நபர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் இங்கு அடிக்கடி வருகை தந்து கொண்டிருந்தனர். இருப்பினும் எங்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியவில்லை.” என்றார்.

ராம்குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவனது அடையாளங்கள் வெளியாக துவங்கியதும், ஊடகத்தினர் அந்த தங்கும் விடுதிக்கு வெளியே முகாமிடத் துவங்கினர். இதனை தொடர்ந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொன்ற அந்த கொலையாளியை அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் மேலோங்கியது.

அந்த தங்கும் விடுதியின் முக்கிய நுழைவாயில் இரவு 2 மணி முதல் காலை 10 மணி வரை அடைக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த விடுதியில் வசித்த அனைவரையும் தெளிவாக கேள்விகள் கேட்கப்பட்ட பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அறை எண் 404 இல் ஹரிசுதன் மற்றும் நட்சன் என்ற இரு பெயர்கள் இருந்தாலும், அவர்கள் அந்த அறையில் வசித்த பழைய நபர்கள் என்பதை அங்கு வசிப்பவர்கள் உறுதி செய்தனர். சமீபத்தில் தான் ராம்குமார், அந்த அறையில் வேறொரு நபருடன் வசித்து வந்துள்ளான். அந்த மற்றொரு நபர் தலைமறைவாகியிருப்பதாக விடுதிவாசிகள் கூறுகின்றனர்.

இந்த விடுதி அருகே மதர்ஸ் கிச்சன் என்ற பெயரில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் சந்துரு என்பவர், தனது கடை ஊழியர் ராம்குமாரை சில முறைகள் பார்த்துள்ளதாக நியூஸ் மினிட்டிடம் கூறினார்.

Also read: 

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com