
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்கு பதிவு நாளான இன்று (மேய் 16) கேரளா தலைநகர் திருவனந்தபுரம், தமிழ் நாட்டின் திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து மணப்பெண்கள் திருமணத்திற்கு முன்னர் அல்லது பின்னர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தது சுவாரசியமாக இருந்தது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த 25 வயதான மணப்பெண் அனு, முதல் முறை வாக்காளர். இவரை போன்றே, திருப்பூர் மாவட்டம் சமல்புரத்தை அடுத்த பலபாளையத்தில் வாக்குச்சாவடி எண் 215 இல் மணப்பெண் ஒரு வர தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இவரை குறித்து மேற்கொண்டு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை.
மூன்றாவதாக, மதுரையை சேர்ந்த மணப்பெண், புவனேஸ்வரி. இவர் தனது திருமணம் முடிந்த பின் வாக்கினை செலுத்த வந்தார்.
அனு, முதன்முறையாக தனது வாக்கினை செலுத்த வந்ததை மிகவும் சந்தோஷமாக கருதுவதாக கூறுகிறார். தான் தனது திருமண நாளான இன்று, தனது வாக்குரிமையை பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாக கருதுவதாக கூறினார். அனு தனது வாக்கினை செலுத்திய பின்னர் சுமார் ஒரு மணி நேரம் காரில் பயணித்து, திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று சேர்ந்தார்.
தனது திருமண நகைகளை அணிந்து பெருமை கொள்வதை போன்றே, வாக்குரிமையை பயன்படுத்தியதற்காகவும் இந்த மணப்பெண்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.
News, views and interviews- Follow our election coverage.
Click TN Election Special
Click Kerala Election Special