தங்கள் பிரச்சனைகளை இரு கழகங்களும் மாறி மாறி பழி போடுவதில் தான் தீவிரமாக இருக்கிறார்களே தவிர தீர்வு ஏற்படுத்தவில்லை என கூறுகின்றனர் விவசாயிகள்

Tamil TN 2016 Friday, May 13, 2016 - 08:44

“எங்கு அவர் சென்றாலும் ‘செய்வீர்களா ?‘ என கேட்கிறார். ஆனால் நான் அவரை பார்த்து, ’நீங்க செய்தீர்களா ?’ என கேட்கிறேன். தற்போது அவர் விவசாய கடன் சலுகையை அறிவிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ? “ என காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து கொண்டிருந்தார்.

மன்னார்குடியின் பிக் பஜார் தெருவுக்கு அதிக தொலைவில்லாத ஒரு பகுதியில் நின்று ஸ்டாலின் இவ்வாறு ஜெயலலிதாவிற்கு எதிரான வெறுப்புணர்வை மக்களிடையே தூண்டிவிட, அதிமுகவால் போடப்பட்ட ஒரு டிவி விளம்பரம் 2011 இல் அம்மா ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகள் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டதாக கூறி கொண்டிருந்தது. அம்மா, தமிழ் விவசாயிகளுக்காக காவிரி பிரச்சினையில் போராடி, உரிமையை பெற்று தந்ததாக அதிலிருந்து வெளியான குரல் மேலும் கூறியது.

தமிழகத்தின் பிற பகுதிகளை போல் அல்லாமல், காவிரி டெல்டா பகுதி வளமிக்க விவசாய நிலமாகவும், தமிழகத்தின் உணவு களஞ்சியமாகவும் இருந்து வருகிறது. இரு பக்கத்திலும் இருந்து வருகிற பிரச்சாரங்கள் பெரும்பாலும் விவசாயிகளை நம்ப வைப்பதில் தான் கவனம் செலுத்தின. விவசாயிகள் வாழ்வு மிகவும் சோகமாகி போனதை போன்றும், அதிமுக தான் அதற்கு காரணம் என்றும் விவசாயிகள் நம்ப வேண்டும் என்று திமுக விரும்புகிறது. ஆனால் அதிமுகவோ, சில பைகள் நிறைய இலவசங்களை கொண்டு வந்து, கூடவே சில திட்டங்களின் பட்டியலையும் போட்டு, இவைகள் எல்லாம் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருந்தன என கூறுகிறது.

நிஜமான சூழலோ, திமுகவின் வாதத்தை ஒத்தே உள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு மட்டுமே தங்கள் வாழ்க்கையின் மோசமான நிலைக்கு பொறுப்பு இந்த இரு கட்சிகளும் தான் என்று தெரியும்.

அரசுக்கு எதிரான கோபம் நன்கு தெரிய கூடிய வகையில் உள்ளது. அவர்களது நிலையை பற்றி கேட்கும்போது, விவசாயிகள் கடும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.” அவர், காவிரி பிரச்சினைக்காக போராடியதாக கூறுகிறார். ஆனால் காவிரி தண்ணீர் எங்கே ? எல்லாமே பேப்பரில் மட்டுமே உள்ளது.” என்கிறார் செல்வம். இவர் மன்னார்குடி அருகேயுள்ள பாளையங்கோட்டை கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறார்.

ஜெயலலிதா கூட விவசாயிகளின் இந்த கோபத்தை உணர்ந்து கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாகவே, விவசாயிகளுக்காக பெரும் எண்ணிக்கையில் இலவசங்களும், திட்டங்களையும் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். ஆனால், திமுக, இதற்காக அவரை கடுமையாக விமர்சிக்கிறது. தங்கள் செய்தி விவசாயிகளை போய் சேரும் என்றும் அது நம்புகிறது.

எப்படியாயினும், விவசாய மானியம், பொங்கலுக்கு இலவச வேட்டி,சட்டை உள்ளிட்ட இலவச அறிவிப்புகள் பல வந்தாலும், விவசாயிகளின் கோபம் தணிந்ததாக தெரியவில்லை.” நாங்கள் பிச்சை எதுவும் கேட்டோமா ? பொங்கலுக்கு 500 ரூபாய் அல்லது வேறு ஏதேனும் இலவசமாக தர சொல்லி நாங்கள் பிச்சை கேட்டோமா ? எங்களுக்கு எங்கள் உரிமை தான் வேண்டும். எங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை தான் வேண்டும். ஏன் அவர்கள் எங்களுக்கு தரவில்லை ? “ என கேள்வியை எழுப்புகிறார் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்.

2011 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஒருசில தொகுதிகளில் மன்னார்குடியும் ஒன்று. அதன் வேட்பாளராக இருந்தவர் டி.ஆர்.பி.ராஜா. திமுக தலைவர்களுள் ஒருவரான டி.ஆர்.பாலுவின் மகனான ராஜா, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உச்சரித்த தமிழ், மேற்கத்திய கல்வியை கற்றவர் என காட்டிகொடுத்தாலும், அடுத்த வீட்டுக்காரர் என்ற உணர்வு பலரிடம் மேலோங்கி காணப்படுகிறது.

“விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக எதுவுமே பெறவில்லை. கடன்கள் அதிகரித்துள்ளது. இந்த கடன்களை எல்லாம் அதிமுக உருவாக்கி வைத்துள்ளது.” என கூறுகிறார் அவர். அவரது பிரச்சார வேனுக்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். கண்ணில் தென்படும் ஒவ்வொருவரையும்   பார்த்து, அவர் சிரித்தபடியே கையை அசைத்து சென்றார். ஒவ்வொருமுறையும், வாக்காளர்களிடமிருந்து அவர் புகார்களை கேட்கும் போது, “ இந்த கோபத்தை உங்களிடமே வைத்து கொள்ளுங்கள்.அந்த கோபத்தை விட்டுவிடாதீர்கள். அந்த கோபத்தை மேய் 16 அன்று, திமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் காட்டுங்கள்.” என்று கூறுகிறார்.

ஆனால் ராஜாவோ மற்றொரு வகை பிரச்சினையை எதிர்கொள்ளுகிறார். அதிமுக ஆட்சியில், பதவியில் இருக்கும் திமுக எம்.எல்.ஏ அவர். எனவே, பிரச்சினைகளுக்காக அதிமுகவை விமர்சிக்கும் அவர், தனது நடவடிக்கைகளாக சிலவற்றை கூறி, அவற்றை சாதனைகளாக பட்டியலிட்டு தன்னை தற்காத்து கொள்ள முயலுகிறார்.

ராஜாவை எதிர்த்து போட்டியிடும் எஸ்.காமராஜ் சசிகலா கூட்டணியினரின் ஆதரவுடன் களத்தில் நிற்பவர். இவரும் வலுவான சமுதாய பின்புலம் உள்ளவர். சொந்தமாக வியாபாரம் நடத்தி வரும் இவருக்கு, விளிம்புநிலை ஜாதியினரிடையே நல்ல ஆதரவு உண்டு. “ ஒவ்வொரு வீடுகளில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்ச்சிகளுக்கும் அவர் போவது வழக்கம்.” என கூறுகிறார் அதிமுக ஆதரவாளர் ஒருவர்.

TRB Rajaa with Stalin

கடன் தொல்லை, விவசாய நிலம் வளத்தை இழத்தல், தொழிற்சாலை திட்டங்கள் என டெல்டா பகுதிகள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. ஆனால், விவசாயிகள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை, கண்மூடித்தனமாக போடப்பட்ட எண்ணற்ற ஆழ்துளை கிணறுகளால், நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருவது தான்.

“காவிரி பிரச்சினையில் அரசால், அதிகமாக ஒன்றும் செய்துவிட முடியாது.ஆனால், அவர்களால் நீராதாரங்களை பராமரித்து, நிலத்தடிநீர் வற்றாமலிருக்க நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்த காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், அரசு அதில் தோல்வியடைந்துள்ளது.” என கூறுகிறார், விவசாய நிபுணரும், பேராசிரியருமான நாகராஜ்.

அவர் மேலும் கூறுகையில் “ கடந்த 5 வருடத்தில் விவசாயிகளின் வாழ்க்கை மேலும் மோசமடைந்துள்ளது “ என்றார்.

விவசாய நிலங்கள் பல அழிந்து வருவதாக நாகராஜ் குறிப்பிட்டு கூறுகிறார். இதை ஒத்துக்கொள்ளும் முகிலன்,வளமிக்க  விவசாய நிலங்களை பாழாக்கி, அந்த இடத்தில், எரிவாயு அகழ்வதும், நிலக்கரி தோண்டி எடுப்பதற்கும் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்றார்.

Image: Agriculture/ Flickr.com

ஆனால், இந்த பிரச்சினைகள் எல்லாம், மாறி மாறி பழி போடும் வகையில்,  மேஜை பந்தாட்டம் போல் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் அமைந்துள்ளது.

மீத்தேன் திட்டம் ? திமுக அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அதிமுக கூறுகிறது. ஆனால் திமுக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே அந்த கையெழுத்து போடப்பட்டதாக கூறுகிறது. இப்போது அதனை திமுக குப்பையில் போட விரும்ப, அதிமுகவோ, அதனை செய்ய விரும்பாமல் உள்ளது.

விவசாய நிலங்கள் அழிந்து போவது பற்றி ? திமுகவில் இருப்பவர்கள் எல்லாம், நில அபகரிப்பாளர்கள் என அதிமுக கூறுகிறது. ஆனால், திமுகவோ, விவசாயம் சம்பந்தமான கொள்கை அதிமுகவிடம் இல்லாதது தான் அதற்கு காரணம் என்கிறது.

விவசாய கடன் ? திமுகவும் அதிமுகவும் ஒருவரையொருவர் நோக்கி  தங்கள் கைகளை காட்டி கொள்கின்றனர். இரு தரப்பினருமே, விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளனர்.

இத்தகைய போக்கு, விவசாயிகளை எரிச்சலடைய செய்துள்ளது. “ இருவருமே ஆட்சியில் இருந்துள்ளனர். அப்படியெனில் இருவரும் என்ன செய்துள்ளனர் ? “ என கேட்கிறார் முகிலன்.

ஆனால், இந்த கோபம், அதிமுகவிற்கு எதிராக கூடுதலாக இருக்குமா ? டெல்டா பகுதி, தனது கோட்டையாக இருப்பதால், திமுக நம்பிக்கையுடன் உள்ளது.

Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.