கடந்த முறை முதன்முதலாக தனது சொந்த தொகுதியில் அவர் போட்டியிட்ட போது 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

news Thursday, May 05, 2016 - 14:26

ஒவ்வொரு முறையும் திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த தொகுதியான திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் போது, ஒரே பல்லவியையே கூறி கொண்டிருக்கிறார். “ இது தான் எனது கடைசி தேர்தல். எனக்கு வாக்களியுங்கள். சில கல்லூரிகள் கொண்டு வருவேன் என உறுதியளிப்பார். ஆனால் அங்கு நம்மால் போய்விட கூட முடியாது. எல்லாம் முடிந்த பின் அவர் கோபாலபுரத்திற்கு திரும்பி சென்றுவிடுவார்.” என 26 வயது மென்பொறியாளர் கூறுகிறார். கடந்த 2006 தேர்தலிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் திருவாரூரில் பேசுவதை நினைவில் வைத்துள்ளார். பிரவீன் இவ்வாறு பேசும் போது அவருக்கு அருகில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளம் வாக்காளர்கள். ஒவ்வொருவரும் மயக்கத்திலிருந்து விடுபட்டவர்களாய் “ கடந்த 10 வருடமாக, இது தான் எனது கடைசி தேர்தல் என அவர் கூறிக் கொண்டிருக்கிறார் “ கூறினர்.

“நாங்கள் எதுக்கு கவலை பட வேண்டும் என்று பலரும் கேட்பதுண்டு. ஆனால் ஓட்டை அவருக்கு போட்டுவிடுவார்கள். ஏனென்றால், முதலமைச்சர் பதவிக்கான நபர் என்பதால் தொகுதியின் வளர்ச்சி பணியை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை” என்கிறார் ஒரு திமுககாரர்.

கடந்த முறை முதன்முதலாக தனது சொந்த தொகுதியில் அவர் போட்டியிட்ட போது 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது, 1957 முதல் கடந்த 12 தேர்தல்களில் அவர் பெற்ற வெற்றிகளிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேர்தலாக இருந்தது.

“ சொந்த தொகுதி என்ற பெயரில், அவர் தனது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. கடந்த முறை, அவருக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தவர்களாக இருந்தோம். ஆனால் ஏமாற்றத்துக்கு உரியதாக போய்விட்டது.சேப்பாக்கம் தொகுதியில் குறைந்த வாக்குகளில் வெற்றி பெற்றிருந்ததால், தற்போது சொந்த தொகுதி சென்ட்டிமென்ட்டுடன் வந்துள்ளார்.” என முன்னாள் திமுக உறுப்பினரும், பெட்டிக்கடை வைத்திருப்பவருமான பழனி கூறுகிறார்.

கடந்த 2006 இல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 8,522  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பழனி மட்டுமல்ல, இந்த தொகுதியில் உள்ள பல வாக்காளர்களும் கருணாநிதி ஜெயிப்பார், ஆனால் கடந்த முறையை போல் அல்லாமல் குறைந்த வாக்குகள் வித்தியாசத்துலேயே ஜெயிப்பார் என்கின்றனர்.

அவரை எதிர்த்து இம்முறை ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் முதன்முதலாக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேமுதிக-மக்கள்நல கூட்டணி சார்பில் சிபிஐ உறுப்பினர் மாசிலாமணி போட்டியிடுகிறார். ஆனால், இந்த தேர்தல் வளர்ச்சிக்கான வாக்குறுதியை மையமாக இல்லாமல், வேட்பாளர்களின் நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டு அமையும். “ இங்கே,  யார் திருவாரூரில் உள்ள உள்ளூர்காரர் என்பதில் தான்  வேட்பாளர்களுக்கிடையே போட்டி உள்ளது” என்கிறார் திருவாரூர் சந்தையில் பீடி விற்கும் ராஜேஸ்வரி. பன்னீர்செல்வமோ, “மண்ணின் மைந்தன்” என்ற கோஷத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

“பன்னீர்செல்வத்திற்கு உள்ளூரில் ஒரு வலுவும் இல்லை. ஆனால் அவர் அம்மாவின் கட்சி வேட்பாளர் என்பதற்காக நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு வாக்குகள் கிடைக்காது. இருப்பினும் இந்த முறை ஓட்டுகள் பெறுவார்.”  என கூறினார் ராஜேஸ்வரி.

வயல்கள் நிறைந்த பகுதியில், மணி, கூடவே 3 தொழிலாளர்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். உணவு இடைவேளையின் போது அவர்களிடம் பேசிய போது, “ இந்த பருவத்தில் நெல் விளைச்சல் ரொம்ப மோசமாகவே எங்களுக்கு இருந்தது.இந்த வருடம் விளைச்சலும் ரொம்ப மோசம் தான்” என்றார் அவர். “ எங்களுக்கு எதுவுமே செய்யப்படாததால் நாங்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறோம்.ஒரே ஒரு முன்னேற்றம், மீத்தேன் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தான்.” என கூறினார் அவர். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து, அதிமுக அரசு அந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதை நிறுத்தி வைத்தது.சில விவசாயிகள் இம்முறை அதிமுகவிற்கு வாக்களிப்போம் என கூறுகையில் சில வயதான தொழிலாளர்கள் கலைஞரின் சீனியாரிட்டிக்காக அவருக்கு வாக்களிப்போம் என்றனர்.

 

News, views and interviews- Follow our election coverage.

Click TN Election Special

Click Kerala Election Special

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.