கடந்த இரு வருடங்களாக, திருச்செங்கோட்டு நகரத்தில் ஜாதி ரீதியான சச்சரவுகளும், அதை தொடர்ந்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வந்துள்ளன.

news Saturday, April 23, 2016 - 21:56

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் மலையடிவாரத்தில் உள்ள காலனிக்கு செல்ல செங்குத்தான பகுதியை ஏறி செல்ல வேண்டியிருந்தது. சிலர் தங்கள் வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் சிலர் சாய்வாக அமர்ந்திருந்தனர். “ இந்த முழு பகுதியும் வன்னியர்கள் வசிக்கும் காலனி. தலித்கள் வசிக்கும் பகுதி இதன் மத்தியில் உள்ளது.” என்றார் ஒரு பெண்.

கடந்த இரு வருடங்களாக, திருச்செங்கோட்டு நகரத்தில் ஜாதி ரீதியான சச்சரவுகளும், அதை தொடர்ந்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கடந்த 2011 இல் தேமுதிக – அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிகவின் சம்பத்குமார் இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ள இந்த பகுதியில், அதிக அளவில் மக்கள் போக்குவரத்து தொடர்பான தொழில்களை செய்து வருகின்றனர். சம்பத்குமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை 23000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திருச்செங்கோடு பொதுவாக அதிமுக வலுவாக உள்ள பகுதி. இம்முறை அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதி போட்டியிடுகிறார். இன்னும் அவர், வாக்கு கேட்க துவங்காத நிலையில், பலரும் தங்கள் ஆதரவை அதிமுகவிற்கு அளித்து வருகின்றனர்.

அம்பேத்கார் காலனியில் மொத்த மக்கள் தொகை 15000 பேர் இருக்கும். அவர்களில் பலரும் கடந்தமுறை அதிமுக கூட்டணியில் சம்பத்குமார் இருந்ததால் வாக்களித்ததாக கூறினர். “ அரசு எங்களுக்கு கழிப்பறை ஒன்றை கட்டி தந்துள்ளது. ஆனால் அது எங்களை விட அவர்களுக்கு தான் பயன்படுகிறது.” என்றார் தினக்கூலி வேலை செய்து வரும் கஸ்தூரி. இந்த கழிப்பறையை பயன்படுத்துவது குறித்து இரு குழுவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், வன்னியர்கள் இந்த கழிப்பறையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், தலித் மக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்த கூடாது எனவும் கூறி பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது.

“அம்பேத்கார் காலனி என இப்பகுதி அழைக்கப்பட்டாலும், நாங்கள் ஒவ்வொரு நாளும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறோம்.” என கூறுகிறார் கோயிலில் வேலை செய்யும் செல்வன் என்ற தொழிலாளி.

பெருமாள் முருகன் மற்றும் கோகுல்ராஜ் விவகாரங்கள் அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. “ கழிவறைக்கு செல்லும் போதும் ஜாதி இருக்குமெனில் நாங்கள் எப்படி அங்கு போவது ? இதனால் அரசின் எல்லா திட்டங்களும் வீணாகத்தான் போகும்.” அம்பேத்காரின் மார்பளவு சிலை அங்கே காணப்பட்டது. அதிலிருந்து மூன்று பாதைகள் சென்றன. செல்வன் மீண்டும் மற்றொரு தகராறை குறித்து பேசினார். “ சிலைக்கு எதிரே சாலை ஒன்று போடு முயற்சித்த போது, அவர்கள் ஏற்க மறுத்தனர். தலித்களாகிய நாங்கள் அந்த சாலை வழியாக செல்வதை அவர்கள் விரும்பவில்லை. வன்னியர்களுடன் சண்டையை தவிர்க்கவே இவ்வாறு தடுப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் எங்கள் மீதான துவேஷம் கொண்டு தான் இதை எதிர்ப்பதாக நான் நினைக்கிறேன் ” என்றார் அவர்.

அவர்களிடம் கலப்பு திருமணங்கள் குறித்த கேள்வியை கேட்ட போது, அவர்கள் அனைவரும் ஏறெடுத்து பார்த்தனர். “ தலித்களும், வன்னியர்களும் காதலில் விழுந்து திருமணம் செய்வதற்கு எதிரான மனநிலையை நாங்கள் மாற்றிவிட்டோம்.  அதேவேளை பெரிய சண்டைகள் உருவாகுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் அனுமதியில்லாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உடனே நாங்கள், அவர்களை இங்கிருந்து எங்கேனும் அனுப்பி வைத்துவிடுகிறோம்.” என செல்வன் கூறும்போதே குறுக்கிட்டு பேசிய கஸ்தூரி, “ நாங்கள் கலப்பு திருமணத்திற்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். இன்னுமொரு பெரிய ஜாதி சண்டை உருவாகுவதை நாங்கள் விரும்பவில்லை.” என்றார் அவர்.

செல்வன் வேகமாகவே மற்றொரு தீர்வையும் கூறினார். “ எங்கள் எம்.எல்.ஏ சில நல்ல விஷயங்களை செய்துள்ளார். சில குறிப்பிட்ட மிகப்பெரிய வார்டுகளை அவர் இரண்டாக பிரித்துள்ளார். இதனால் அந்த வார்டில் உள்ள மெஜாரிட்டியான மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. எங்களுக்கும் அவர் இது போன்று செய்தார் எனில், எங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் ஒரு தலித் கவுன்சிலரை எங்களால் தேர்வு செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

வன்னியர்கள் அந்த வார்டில் மெஜாரிட்டியாக இருப்பதால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரும் வன்னியர் தான். “ ஒவ்வொருவரும் அரசியல் எங்கள் தலைவிதியை மாற்றாது என சொல்லுகிறார்கள். ஆனால் இந்த யோசனை ஒரு நல்ல மாற்றத்தை எங்களுக்கு உருவாக்கி தரும் என நம்புகிறேன் “ என்றார் கஸ்தூரி. மேலும் அவர், “ நல்ல சாலைகளையும், எங்களுக்கான கழிப்பறைகளையும் உருவாக்கி கொள்ளவாவது அதனால் முடியும் “ என்றார்.

 

News, views and interviews- Follow our election coverage.

Click TN Election Special

Click Kerala Election Special

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.