நியூஸ் மினிட்டிற்கு கிடைத்துள்ள ஆவண நகல்களின் படி, அந்த கோயிலிலிருந்து 25 மீட்டர் அருகேயுள்ள வீட்டு உரிமையாளர் பங்கஜாக்ஷி போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்துள்ளார்.

news Sunday, April 10, 2016 - 12:48

கொல்லம் புற்றிங்கல் கோயிலில் நடந்த வருடாந்திர பட்டாசு விடும் போட்டி, கொல்லம் கூடுதல் மாவட்ட மஜிஸ்திரேட்டின் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த கோயிலின் இரு பூஜாரிகளுக்கிடையே பட்டாசு வெடிக்கும் போட்டியில் ஒருவரையொருவர் விஞ்சும் அளவு போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து, வருவாய் துறையினரும், போலீசாரும் போட்டி நடத்த அனுமதி மறுக்க வலியுறுத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பத்தை கூடுதல் மாவட்ட மஜிஸ்திரேட் நிராகரித்துள்ளார்.

நியூஸ் மினிட்டிற்கு கிடைத்துள்ள ஆவண நகல்களின் படி, அந்த கோயிலிலிருந்து 25 மீட்டர் அருகேயுள்ள வீட்டு உரிமையாளர் பங்கஜாக்ஷியிடமிருந்து மாவட்ட கலெக்டர் புகார் பெற்றுள்ளார். தனது வீட்டில், வயதான, நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் இருப்பதால், இந்த போட்டி நடத்த அனுமதிக்ககூடாது என ஒவ்வொரு வருடமும் அவர் புகார் அளிப்பது வழக்கம்.

இந்த புகாரை பெற்று கொண்ட கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட், அதிகாரிகளிடம் சூழலை ஆய்வு செய்து, நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாட்டு விவரங்களை அறிக்கையாக தரும்படி கேட்டுள்ளார். அதன்படி தாசில்தார் கொடுத்த அறிக்கையில், அதிக சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்த கூடாது, அதிக கூட்டம் வராமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும், கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பட்டாசுகளை பயன்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும் என்ற  நான்கு நிபந்தனைகளை ஏற்று கொண்டு அதனை பூர்த்தி செய்தால் பட்டாசு வெடிக்கும் போட்டியை நடத்த அனுமதியளிக்கலாம் என கூறியிருந்தார்.

சுற்றுச்சூழல் அதிகாரிகளும், தீயணைப்பு அதிகாரிகளும், இது போன்ற போட்டி நடத்த, சில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்றினாலே, அனுமதி கொடுக்க முடியும் என கூறுகின்றனர்.

பரவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், இது போன்ற நிகழ்ச்சி மக்கள் நெருக்கடியற்ற பகுதிக்கு எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளார்.

சாத்தனூர் எம்எல்ஏ ஜெயலால் கூறுகையில், “ எனக்கு தெரிந்தவரை, கோயில் நிர்வாகிகள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எழுத்துபூர்வ அனுமதி பெற்றுள்ளனர்.ஆனால் அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதாக இல்லை “ என கூறுகிறார்.

அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், “ நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக எங்கள் வீடு இதனால் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் இருந்தோம். அதனால், நாங்கள் ஒரு 10 பேராக சேர்ந்து கலக்டருக்கு புகார் அளித்தோம். அதிகாரிகளும் இந்த பிரச்சினையில் தலையிட்டனர். அதனிடையே யாரோ ஒருவர் அழுத்தம் கொடுத்து, இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. “ என்றார்.

கடைசியாக ஞாயிறு அதிகாலை பட்டாசு போட்டி வெடிவிபத்தாக மாறி 84 உயிர்களையும் பலிகொண்டுள்ளது.

 Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.