கடந்த 2014 இல் இந்த பக்கங்களை முடக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக சுப்ரமணிய சுவாமி கூறியிருந்தார்.

 PTI
Vernacular Tuesday, March 29, 2016 - 13:25

பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி பெயரில் இயங்கி வந்த இரு பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி பெயரில் நையாண்டி செய்து ஒரு அன்அபிசியல் சுப்ரமணியம் சுவாமி என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கமும், அன்அபிசியல் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் சுப்ரமணிய சுவாமியின் ஆதரவாளர்கள் தரப்பில் மற்றொரு பேஸ்புக் பக்கமும் செயல்பட்டு வந்தது. இந்த இருபக்கங்களையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கி வைத்துள்ளது.

Screenshot

Screenshot

கடந்த புதன்கிழமையன்று சுப்ரமணிய சாமியை நையாண்டி செய்து இயங்கி வந்த பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டவுடன், அதனை திரும்ப இயக்க வலியுறுத்தி, இணையதளம் மூலம் மனுக்கள் உருவாக்கும் சேன்ஜ் என்ற வெப்சைட்டில் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

“இந்த பக்கமானது, தற்போதைய அரசியல் நிலவரத்தை பற்றிய பல உண்மைகளை எடுத்து கூறியது. மேலும், மிகவும் அரிதாக நிஜ நபர்களை விட நையாண்டி செய்யும் இந்த பக்கம், அதிக உணர்வுமிக்க உண்மையான தகவல்களை எடுத்து கூறியது. பேஸ்புக் பக்கம் இந்த பக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என 1300 க்கும் அதிகமானோர் ஒப்பிட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில் ஒப்பிட்டுள்ள ஒருவர் குறிப்பிடுகையில், “ இந்த பக்கமானது அதிக தகவல்களை கொண்டிருந்தது. நல்லறிவு சார்ந்ததுடன் தீங்கற்றதாகவும் இருந்தது. அப்படியிருக்க, ஏன் பேஸ்புக் நிறுவனம் அதை முடக்கியது என தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 2014 இல் சுப்ரமணிய சுவாமி, அந்த நையாண்டி பக்கத்தை உடனடியாக முடக்கவில்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக கூறியிருந்தார்.

அந்த பக்கமானது சுப்ரமணிய சுவாமியை கிண்டலடிப்பதுடன் மட்டுமல்லாமல், பாரதீய ஜனதா கட்சியையும், அதன் இந்துத்வா கொள்கையையும் நையாண்டி செய்துள்ள பதிவுகள் மற்றும் மீம்ஸ்களை போட்டு வந்தது.

டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ கணக்கை வைத்து செயல்படும் சுப்ரமணிய சுவாமிக்கு பேஸ்புக் கணக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சுப்ரமணியம் சாமி பெயரில் இயங்கி வந்த மற்றொரு பக்கமும் முகநூல் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது.இந்த பக்கம் பாஜக தலைவரின் அனுமதியுடன் இயன்கி வந்துள்ளது. இது ஷன்க்நாத் என்ற குழுவினரால்  இயக்கப்பட்டு வந்தது.

கடந்த வருடம், நியூஸ் மினிட்டுடனான ஒரு நேர்காணலில், சர்ச்சைக்குரிய அந்த பக்கத்தை உருவாக்கிய நபர், தான் சவுதியிலிருந்து பண உதவி பெறும் ஒரு தீவிரவாதி என்றும், இத்தாலி மாபியா கும்பலால் இயக்கப்படுபவர் என்றும் அழைக்கப்பட்டதாக கூறினார்.

“துவக்கத்தில் பாபா ராம்தேவ் பெயரில் தான் பேஸ்புக் கணக்கினை துவங்க நினைத்தேன். ஆனால் சுப்ரமணிய சுவாமியின் ட்வீட்களை கண்டதும், அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன்.அவரை பற்றிய பேஸ்புக் பதிவுகள் ஆயிரக்கணக்கில் லைக்குகள் வந்ததுடன், எண்ணற்றோர் அவற்றை ஷேர் செய்யவும் துவங்கினர்” என்றார்.

Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.