அதில் குறிப்பிட்டுள்ள முகவரி போலி முகவரி என போலீசார் கூறியதாக சங்கரின் குடும்பத்தினர் தகவல்

Vernacular Tamil Nadu Saturday, March 19, 2016 - 11:06

ஜாதி மாறி திருமணம் செய்ததாக கூறி கொல்லப்பட்ட, தலித் இளைஞர் சங்கரின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரின் தந்தை வேலுச்சாமியின் பெயரை குறிப்பிட்டு வந்துள்ள அந்த கடிதம், அலாவுதீன் என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சங்கரின் சகோதரர் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், “ இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் இதில் வந்துள்ள கடிதத்தில் உள்ள முகவரியை வைத்து விசாரித்ததில், அது போலியான முகவரி என்பதை கண்டறிந்துள்ளனர். போலீசார் விசாரித்து கொண்டிருக்கின்றனர். எனது தந்தை, இதனால் மிகவும் பயந்து போய் உள்ளார்.” என கூறினார்.

சக்கிலியன், என வேலுச்சாமியை குறிப்பிட்டு துவங்கும் அந்த கடிதம், குறைந்த சாதியான வேலுச்சாமி, தனது மகன்களை 5 வது வகுப்போ, 8 வது வகுப்பு வரையோ மட்டும் படிக்க வைத்து, செருப்பு தைக்கும் தொழிலை செய்திருக்க வேண்டும். கல்லூரியில் படிக்க வைப்பதெல்லாம் தவறு என்பது போல் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. (கடிதத்தின் நகலை பார்க்க )

குறிப்பு:இந்த கடிதம் சங்கரின் குடும்பத்தினரால் நியூஸ் மினிட்டிற்கு தரப்பட்டது. இதன் நம்பகத்தன்மைக்கு நியூஸ் மினிட் பொறுப்பல்ல . 

 

Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.