சியாச்சினில் பலியான ராணுவ வீரர்களின் சவப்பெட்டியிலும் அம்மா படம் - புதுவித சர்ச்சை

சியாச்சினில் பலியான ராணுவ வீரர்களின் சவப்பெட்டியிலும் அம்மா படம் - புதுவித சர்ச்சை
சியாச்சினில் பலியான ராணுவ வீரர்களின் சவப்பெட்டியிலும் அம்மா படம் - புதுவித சர்ச்சை
Written by :

அமைச்சர் செல்லூர் ராஜூ இழப்பீடு தொகை 10 லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் ,முதலமைச்சர் ஜெயலலிதா படத்தையும் சவப்பெட்டியின் அருகே பிடித்து வைத்திருந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் ஒட்டப்பட்ட அம்மா படங்களுக்கு பின், தற்போது சியாச்சினில் பலியான ராணுவ வீரரின் சவப்பெட்டியில் ஒட்டப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

சிப்பாய் கணேசனின் மனைவிக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்கும் போது எடுக்கப்பட்ட  படத்தை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட படம் ஒன்றில் இத்தகைய காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது.

அந்த படத்தில், மாவட்ட கலெக்டர் வீரராகவன், எஸ்பி விஜேந்திர பிதாரி ஆகியோர் அருகில் நிற்க, மாநில கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அந்த காசோலையுடன், ஜெயலலிதா படத்தையும் பிடித்து கொண்டு நிற்பது போன்று அமைந்துள்ளது.

மற்றொரு படத்தில்,சென்னை விமானநிலையத்தில் ராணுவ வீரர்களின் உடல் வந்தபோது, 

இதே அமைச்சர் செல்லூர் ராஜூ, ராணுவ வீரர்களின் சடலத்தின் மீது, அம்மா என எழுதப்பட்ட வாசகத்துடன் மலர் வளையம் வைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

வெள்ள நிவாரண பணிகளின் போது, நிவாரண பொருட்களில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அப்போது, அரசு தரப்பில் அவ்வாறு ஒட்டப்படவில்லை எனவும், தனி நபர்கள், அவர்கள் விருப்பபடி ஒட்டியதாகவும், அரசு விளக்கமளித்தது.

ஆனால், இம்முறை அரசு தரப்பிலிருந்து  முதலமைச்சர் படம் ஒட்டப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Elections 2023

No stories found.
The News Minute
www.thenewsminute.com