சாதிக் பாட்சா, 2ஜி வழக்கில் சிக்கி கொண்ட முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ ராசாவின் நெருங்கிய நண்பர்

news Thursday, March 17, 2016 - 13:04

2ஜி ஊழலில் முக்கிய குற்றவாளியான சாதிக் பாட்சாவின் மரணம், மீண்டும் திமுக தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன இந்த இளம் தொழிலதிபரின், நினைவு நாளன்று, அவரது குடும்பத்தினர் வெளியிட்ட போஸ்டர்கள் தான் இதற்கு காரணம்.

இன்று 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசாவிற்கு நெருக்கமாக இருந்தவர் தான் சாதிக் பாட்சா. புதன்கிழமையன்று,பெரும்பாலான நாளிதழ்கள், சாதிக் பாட்சாவின் 5 வது நினைவு தினத்தை பற்றிய விளம்பரத்தை பிரசுரித்திருந்தன. அந்த விளம்பரத்தில் “ செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயே.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, அதிமுக தரப்பில், இவரது மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.அவரது மரணத்தை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா என பல கேள்விகளை எழுப்புகிறது.

டைம்ஸ் நவ்விடம், பாட்சாவின் மைத்துனர் ஆசிக் கூறுகையில்,” கடந்த 5 ஆண்டுகளாக, எங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, சட்ட நடவடிக்கைகள் பல எடுத்து பார்த்துவிட்டோம். அதனால் எந்த பயனும் இல்லாததால், எங்கள் உணர்வை வெளிக்காட்ட இப்படி ஒரு விளம்பரத்தை போட்டுள்ளோம்” என்றார்.

மேலும் அவர், “கடந்த 2006 ஆம் ஆண்டு எனது மைத்துனர் சாதிக் பாட்சா சென்னையில் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றை துவங்கினார். அதன்பிறகு, அரசியல்வாதிகள் சிலர் பங்குதாரர் என்ற பெயரில் கம்பெனிக்குள் நுழைந்தனர். சிலர் அதன் இயக்குனர்களாகவும் உருவெடுத்தனர். இவர்கள் சாதிக் பாட்சாவிற்கு கொடுத்த, அழுத்தங்களின் காரணமாக, லாபத்தில் இயங்கி கொண்டிருந்த அந்த கம்பெனி சரிவை சந்திக்க துவங்கியது.” என கூறினார்.

மேலும் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய அந்த கம்பெனி, சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என தனது மனைவியிடம் பாட்சா கூறியதாக ஆஷிக் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மேய் 5 இல் சாதிக் பாட்சா, தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எழுந்த பல ஊகங்களுக்கிடையில், விசாரணை நடத்திய சிபிஐ,  அவரது மரணம் ஒரு தற்கொலை என கூறியது. தனது தற்கொலை குறிப்பில், அவர் எவரது பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.

Become a TNM Member for just Rs 999!

You can also support us with a one-time payment.

Rs 200Rs 500Rs 1500Custom