25 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த நளினி, தனது தந்தை இறந்ததையொட்டி, 12 மணி நேர பரோலில் வெளி வந்தார்.

 Image: Nishanth Krish
news Thursday, February 25, 2016 - 11:43

இன்று காலை 8 மணி முதல், ஊடகங்களின் கேமராக்கள் சென்னை கோட்டூர்புரம் அருகேயுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அருகில் கொண்டு அந்து வைக்கப்பட்டிருந்தன. 25 ஆண்டுகளுக்கு பின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி ஸ்ரீஹரனின் வருகைக்கான காத்திருப்பு அது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி காலை 10 மணியளவில் 10 போலீசார் புடை சூழ ஒரு போலீஸ் வேனில் வந்திறங்கினார். அவரது குடும்பத்தினர் தங்கி இருக்கும் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டாலும், இரண்டு முறை தனது தந்தையின் உடலை பார்க்க அவர் கீழிறங்கி வந்தார். கலக்கமடைந்த முகத்துடன் காணப்பட்ட நளினி , அழுது கொண்டிருந்த தனது தாயாரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

அவர் கீழே இறங்கி வரும் போதெல்லாம், புகைப்படம் எடுப்பதற்காக ஒரு திடீர் பரபரப்பு தொற்றி கொண்டது. ஒரு கட்டத்தில், அமைதியாக அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக நளினியின் குடும்பத்தினர், செய்தியாளர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர்.

மாலை 3.30 மணியளவில் அவரது தந்தையின் உடல் அடக்கம் பண்ணபடுவதற்கு எடுக்கப்பட்ட போது, 25 ஆண்டுகள் அவர் செலவழித்த வேலூர் சிறைக்கு மீண்டும் செல்வதற்கான நேரமும் வந்தது.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்னை வெளியில் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். நாங்கள் 7 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்” என கூறினார்.

மேலும் அவர், தன்னை 12 மணி நேர பரோலில் விடுதலை செய்த தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லுவதாகவும் கூறினார். அத்துடன் தன்னை விடுதலை செய்ய கேட்டு தமிழக அரசிடம் முறையிட போவதாகவும் கூறினார்.

தனது தந்தையின் இறுதி சடங்கு முடிந்த பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் தனக்கு தண்டனை குறைக்க உதவியதற்காக நன்றி கூறுவதாக கூறினார். கூடவே தன்னை விடுதலை செய்ய அவர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

நளினியின் இளைய சகோதரரான பாக்கியநாதன் கூறுகையில், 25 ஆண்டுகளாக ஜெயிலில் கழிந்துள்ள நிலையில், தனது சகோதரியை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

ஜனவரி 28, 1998  இல் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், நளினிக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஏப்ரல் 24, 2000 அன்று உத்தரவிட்டார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசியலில் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. அரசியல் கட்சிகள் குறிப்பாக  அதிமுகவும், திமுகவும் இந்த விஷயத்தில் வாக்கு வங்கியை மனதில் கொண்டே செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.