மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவரை திருமாவளவனை எதிர்த்து அதே ற பெயரை கொண்ட சுயேச்சை வேட்பாளர் வளையல் சின்னத்தில் போட்டி இட்டுள்ளார்.

news Friday, May 20, 2016 - 18:54

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  வெறும்87  வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்று போனார். அவரின் இந்த தோல்விக்கு, அரசியல் சதி மற்றும் செல்லாத தபால் வாக்குகள் காரணம் என கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெயரை கொண்டே, திருமாவளவன் என்றொரு மற்றொரு சுயேச்சை வேட்பாளரும் களமிறக்கப்பட்டுள்ளார். தனி தொகுதியான, இந்த தொகுதியில் போட்டியிட்ட அந்த சுயேச்சை வேட்பாளர் மொத்தமாக 289 வாக்குகள் பெற்றிருந்தார்.

“ வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளார், திருமாவளவன் பெயரை கொண்ட மற்றொரு வேட்பாளரை சுயேட்சையாக களமிறக்கியிருப்பார் என நாங்கள் சந்தேகப்படுகிறோம். அது போன்றே எங்கள் சின்னம் மோதிரமாக இருக்கையில், திருமாவளவன் என்ற பெயரை கொண்ட அதே சுயேட்சை வேட்பாளர் வளையல் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இது பல வாக்காளர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்கிறார் விடுதலை கட்சிகள் பொது செயலாளர் ரவிக்குமார். மேலும் அவர் இது ஒரு அரசியல் சதி என குறிப்பிட்டார்.

அதிமுக வேட்பாளர் முருகானந்தம் 48450 வாக்குகள் பெற்ற நிலையில், தொல்.திருமாவளவன் 48363 வாக்குகள் பெற்றிருந்தார். சுயேட்சை வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள், அவருக்கு கிடைத்திருக்குமெனில் வெற்றி பெற்றிருப்பார்.

மேலும், 102 தபால் வாக்குகள் , செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதற்கு அறிவிப்புக்கான படிவத்தில் சரியான இடத்தில் கையெழுத்து இடப்படவில்லை என காரணம்  கூறப்பட்டது. அவற்றில் பல வாக்குகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு போடப்பட்டவை என கூறுகிறார் ரவிக்குமார்.

“தேர்தல் ஆணையம், இந்த தபால் வாக்குகளை, சுய அறிவிப்பு படிவத்தில் தவறான இடத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளது என்றும், கெசட்டட் அல்லாத அதிகாரிகளிடம் ஒப்பு பெறப்பட்டுள்ளது என கூறியும் செல்லா வாக்குகளாக அறிவித்தது. ஆனால், வாக்கு சீட்டில் எல்லாமே சரியாக இருந்தது” என கூறினார் அவர் .

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.