தென் மாநிலங்களில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வரும் சூழல் இதனால் உருவாகியுள்ளது.

news Thursday, April 07, 2016 - 15:36

கோடைகாலம் இன்னும் துவங்கவே இல்லை. ஆனால், தென் மாநிலங்களில் அனல் பறக்க துவங்கிவிட்டன. இந்த பருவ காலத்தில் அடிக்கும் வெயிலும் இதுவரையில்லாத புதிய அளவை தொட்டுவிட்டது. இத்தகைய நிலைமை, தென் மாநிலங்களில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வரும் சூழல் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களிலும், சராசரி வெப்பநிலையை விட எந்த அளவு கூடுதலாக கடந்த மார்ச் மாதம் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

கேரளா

இந்திய வானியல்துறையின் கணக்குப்படி கேரளா, கடந்த மார்ச் மாதத்தில் தனது அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தொட்டுள்ளது. இதே நிலைமை ஏப்ரல் மாதம் 34.1 டிகிரியும், மேய் மாதம் 32.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டில் பதிவாகியுள்ள வெப்பநிலையானது, இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பதிவாகியுள்ள வெப்பநிலையை ஒப்பிட்டு பார்த்தால், இந்த ஆண்டு இரண்டு டிகிரி வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் பல மாவட்டங்களில் இன்னும் கூடுவதற்கான வாய்ப்பே அதிகம் என கூறுகிறார் இந்திய வானிலை மையத்தின் மண்டல இயக்குனர் சந்தோஷ்.

கடந்த மார்ச் மாதத்தில் பாலக்காடு அதிகபட்சமாக 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதனை தொடர்ந்து கண்ணூரில் 37.4 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.

கர்நாடாகா

கர்நாடாகாவில், மார்ச் மாதத்தில் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலை 32.7  டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருந்தது. இருப்பினும், இந்த வருடம், மாநிலத்திலேயே அதிக சூடான பகுதியாக இருக்கும் பிதாரில் மார்ச் மாத வெப்பநிலை 40 டிகிரியாக பதிவாகியுள்ளது.வானியல் துறையின் அறிவிப்பு படி, பெங்களூருவில் இந்த ஆண்டு வெப்பநிலை 37.4 டிகிரி என்ற அதிகபட்ச அளவை தொட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1996 ஆம்  ஆண்டு மார்ச்  மாதம் 37.3 டிகிரி என்ற அதிகபட்ச அளவை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து உயரும் வெப்பநிலையானது, நீர் நிலைகள் வறண்டு போதல், நீர்தேக்கங்களிலிருந்து, மின்னுற்பத்திக்கு தேவையான தண்ணீரை சப்ளை செய்ய முடியாததால் மின்னுற்பத்தியில் பாதிப்பு போன்ற அடுத்தடுத்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வறட்சியினால் உணவு உற்பத்தியும்  பெருமளவு பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் சராசரி வெப்பநிலை மார்ச் மாதத்தில் 33.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது என இந்திய வானிலை மையம் கூறுகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு, மிககடுமையான வெப்பநிலையாக 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நான்கு வழிச்சாலைக்காக அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டதும், கனிம வளத்திற்காக சிறு சிறு குன்றுகளை அகற்றியதும் தான் இந்த அதிக வெப்பநிலைக்கு காரணம் என கூறுகின்றனர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள். வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. “ சென்னையில், ஏப்ரல் மத்தியிலிருந்து, மாலை நேரங்களில் மழை பெய்வதன் மூலம், அனல் பறக்கும் வெப்பத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் பகல் நேர வெப்பநிலை மேய் மாதங்களில் 42 டிகிரி செல்சியசையும் தாண்ட கூடும்.” என கூறுகிறார் சென்னை வானிலை மையத்தின் துணை இயக்குனர் எஸ்.ஆர். தம்பி.

ஆந்திர பிரதேசம்

மார்ச் மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் சரசாரி வெப்பநிலை 35.4 டிகிரி வெப்பநிலையாக இருந்தது. வானிலை ஆய்வு மையம், இந்த பருவகால வெப்பநிலை, வழக்கத்தை விட ஒரு டிகிரி கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளது. மேலும் அனல் காற்று வீசுவதற்கான அதிக வாய்ப்புகள் இக்காலக்கட்டத்தில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் கூடவே எல் நினோவின் தாக்கமும் இதில் அமைந்துள்ளது. ஆந்திராவின் அனந்தபூரில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், கர்நூலில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனிடையே பல இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது.

தெலுங்கானா

தெலுங்கானாவில் சராசரி வெப்பநிலை மார்ச் மாதத்தில் 39 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே அனல் காற்றால் மரணங்கள் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், மாநில அரசு, அதை தடுப்பதற்கான திட்டம் ஒன்றை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

“ நாட்டின் வடக்கிலிருந்து வீசும் அனல் காற்று, மாநிலத்தை நோக்கி வீசுவது மட்டுமல்லாது, இங்குள்ள வெப்பநிலையையும் அதிகரிக்க செய்கிறது.” என கூறுகிறார், வானியல் ஆய்வு நிலைய மூத்த அதிகாரி நாகேந்திர கவுடா.

மேலும் அவர். ” வீசும் காற்றில் ஈரப்பதம் இல்லாமல், வறண்ட காற்றாக வீசுகிறது.நகரப்பகுதிகளில் வீசும் இந்த வறண்ட காற்று உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதும் கூட.” என கூறினார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.